பொன்னமராவதியில் 1000 பேர் மீது வழக்குப்பதிவு!!

பொன்னமராவதி மோதல் தொடர்பாக 1000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 12 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மோதல் குறித்து கிடைத்த, காணொளி ஆதாரத்தின் அடிப்படையில் பொன்னமராவதி பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியத்திலுள்ள ஒரு சமூகத்தினரை தவறாக சித்திரித்து கட்செவி அஞ்சல் பதிவிட்ட சந்தேகநபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி அச்சமூகத்தினைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கடந்த வியாழக்கிழமை  பொன்னமராவதி பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதன்போது இவ்விடயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் உறுதியளித்தவுடன் அவர்கள் கலைந்து சென்றுள்ளனர்.

ஆனால் நேற்றுவரை பொலிஸார் எந்ததொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளாதமையினால், உடனடி நடவடிக்கையை கோரி,  அச்சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பொலிஸ் நிலையத்தை நோக்கி திரண்டு வந்துள்ளனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்து அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிஸ்மா அதிபர் வரதராஜூலு, அவர்களைக் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனாலும் அவர்கள் பொலிஸார் மீது கல்வீச்சு  தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் பொலிஸாரின் 8 வாகனங்கள் சேதமடைந்ததுடன், மூன்று பொலிஸார் மற்றும் பொதுமக்கள் சுமார் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து  நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார் தடியடி நடத்தியதுடன் துப்பாக்கிச்சூடு நடத்தி அவர்களைக் கலைத்துள்ளனர்.

இதனால் பொன்னமராவதி ஒன்றியத்தில் பதற்றமான சூழல் நிலவியதுடன் சுற்று வட்டார கிராமங்களில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே காணொளி ஆதாரத்துடன் மோதலில் ஈடுபட்ட 1000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.