ராஜபக்ச குடும்பத்தை சிறைக்கு அனுப்புவோம் – பொன்சேகா சூழுரை!!

கோட்டாபய ராஜபக்ச அல்லது மஹிந்த ராஜபக்ச ஆகியோரில் யார் களமிறங்கினாலும் நாம் அதனைக் கண்டு அஞ்சப் போவதில்லை.
தாம் செய்த குற்றங்களுக்காக ராஜபக்ச குடும்பத்தில் பலர் விரைவில் சிறைக்குச் செல்ல நேரிடும்.”– இவ்வாறு தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.கொழும்பு ஊடகம் ஒன்று குறித்த செய்தியை இன்று வெளியிட்டுள்ளது.அதில் சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளதாவது:-“ஜனாதிபதித் தேர்தலுக்கு மஹிந்த தரப்பு தயார் எனில் அவர்கள் அதனை அறிவிக்க வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ஒரு பக்கமும், பொதுஜன பெரமுனவாக இன்னொரு அணியினர் மறு பக்கமும் உள்ளனர். இவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. ஆகவே, இவர்களால் ஒரு தலைவரை – ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்ய முடியாது” – என்று குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.