பாவப்பட்ட என் மக்கள்!!

சாத்தான் வேதம்  ஓதுவது போல் அபிவிருத்தி அரசியல் பற்றிப் பேசுவோரும் அதன் பின்னே மந்தைகளாகச் செல்வோரும் இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றார்கள்

முள்ளிவாய்க்கால் அழிவுக்கு பின்னர் இனி ஒரு மனித உயிரும் பறிபோகக்கூடாது என்பதற்காகவே தீர்வு தீர்வு தீர்வு என சிந்தனையாளர்களும் தாய்மண்ணை நேசிப்போரும் உரத்துச் சத்தமிட்டோம்

இந்தச் சத்தம் செவிடன் காதில் சங்கு ஊதுவது போல் இருந்தது சில தலைவர்களுக்கும் கட்சிகளுக்கும் அவர்பின்னால் சென்ற அப்பாவி மக்களுக்கும்

இன்று முள்ளிவாய்க்கால் அழிவின் பின் மிகத் துணிச்சலாக எமது மக்களை( 500மேல் உயிராபத்தில்ல்செய்தி) குண்டு வைத்துக் கொன்றுவிட்டார்கள்

நாளை நமது தெருவை நோக்கியும் வருமா
பேராசிரியர்கள்
எழுத்தாளர்கள்
அரசியல்வாதிகள் என இன்ன பிறரும் சிந்திப்பார்களா மனநிலை மாறுமா

கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்த
பணம் எங்கே
கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டிய
வீடு எங்கே
கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்த
பிள்ளைகள் எங்கே
கொஞ்சம் கொஞ்சமாக பெற்ற
பதவிகள் எங்கே
கொஞ்சம் கொஞ்சமாக இணைந்த
உறவுகள் எங்கே

வெறும்30நிமிடத்தில் எல்லாம் மண்ணாகிப்போனது

தமிழனுக்கு சரியான தீர்வில்லை
சரியான தலைமை இல்லை
சரியான நிர்வாகமில்லை
என்ற கையறு நிலையை இது வெளிப்படுத்துகின்றன

குறிப்பாகச் சொல்லப்போனால் மேற்குல நாடுகளின் ரீவீக்கேம் விளையாட்டு ஆரம்பம்
கவலை என்ன வென்றால்
தந்தை செல்வா சொன்னது போல் இல்லாமல்
எம்மக்களை கடவுளும் காப்பாற்றாமல் போனதுதான்
இறுதியாக இது ஓர் இன அழிப்பின் வெளிப்படை வடிவம் வேறு ஒன்றுமில்லை

கண்டனங்களைத் தெரிவிப்பதோடு
 என் மக்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகளை செலுத்துகிறோம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.