குண்டுவெடிப்பு தொடர்பில் பலர் கைது!

குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் 7 பேரை கைதுசெய்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.


வெள்ளவத்தையில் பதற்ற நிலை- சந்தேக நபர் கைது
பாரிய குண்டுகளை கொண்டு செல்லும் வானுடன் அதன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் வான் ஒன்றில் வெடிபொருட்கள் கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் பல இடங்களில் குண்டுத்தாக்குதல் இடம்பெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக வெள்ளவத்தையில் வெடிகுண்டு வெடிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பின் பல பிரதேசங்களில் தாக்குதல் மேற்கொள்ளும் நோக்கில் குண்டுகள் கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தாக தெரிய வருகிறது.

வெள்ளவத்தை ராமகிருஷ்ணா வீதியில் வைத்து குண்டுகளுடன் வான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வான் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை வெடிபொருட்கள் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்ட வீடு ஒன்று பாணந்துறை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குண்டுவெடிப்பு நடைபெற்ற இடங்கள்

கொழும்பில் தாக்குதல் நடத்தியவரின் விபரம்
கொழும்பு ஷங்ரி-லா நட்சத்திர விடுதியில் zahran hashim என்ற நபரே தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெண் ஒருவர் கைது
கொழும்பு - தெமட்டகொட பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பெண் ஒருவர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குண்டுத்தாக்குதல் குறித்து கைதான 10 பேர் குற்ற விசாரணைப் பிரிவிடம் ஒப்படைப்பு

இன்றைய தினம் நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதான 13 பேரில் 10 பேர் குற்ற விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் உள்ளிட்ட தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் இந்த குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.

தற்போதைய அதிகாரபூர்வ தகவல்களின் அடிப்படையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 262 ஆக உயர்வடைந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 33 பேர் வெளிநாட்டுப் பிரஜைகள் என இலங்கை சுற்றுலாசபை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பம்பலப்பிட்டி, தெமட்டகொட உள்ளிட்ட சில பகுதிகளிலிருந்து சந்தேகத்தின் பேரில் கைதான 10 பேர் குற்ற விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தகவல் வெளியிட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.