பெண்களே உருவாக்கிய ஆசியாவின் முதல் செயற்கைக்கோள்!

தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவிகள் இணைந்து `SKI NSLV 9 மணியம்மையார் சாட்' என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளனர்.
ஏரோஸ்பேஸ், கணினி, மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் என்று துறைசார்ந்த மாணவிகள் 15 பேர் இதில் பங்காற்றியுள்ளனர். இந்தத் திட்டத்திற்காக `ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' நிறுவனத்தில் பயிற்சி பெற்று, அதன் கூட்டு முயற்சியோடு உருவாக்கியுள்ளனர். ஆசியாவிலேயே முதன்முதலாக பெண்களால் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் என்ற பெருமையைப் பெறுவதுடன், இந்நிகழ்வு Asian Book of Records-ல் இடம்பெறவுள்ளது.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவிகளால் தயாரிக்கப்பட்ட செயற்கைக்கோள்

மாணவிகளுக்கு உந்துதல் ஏற்படுத்தும் பொருட்டு இஸ்ரோ மையத்தின் மேனாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். சரியாக இன்று காலை 11 மணியளவில் செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது. தொடர்ந்து உற்சாகத்திலிருந்த மாணவிகள் இதைப் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டனர்.

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் முன்னெடுப்பாக இந்த ஐடியாவை முயற்சி செய்தோம். கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேல், அவரவர் துறை சார்ந்த பங்களிப்புடன் பயிற்சி எடுத்தோம். செயற்கைக்கோள் பொதுவாக ஆர்பிட்டள், சப் ஆர்பிட்டள் பாதையாக இயங்குவதாக இருக்கும். ஆனால், நாங்கள் கல்விரீதியில் ஆரம்பகட்டத்தில் இருப்பதால், பலூனோடு பொருத்தப்பட்டு இயங்குமாறு செயற்கைக்கோளை வடிவமைத்தோம். பலூனின் எடை 1200 கிராம் (ஹீலியம் வாயு). 2 கிலோ எடையுள்ள கருவியில் நான்கு சென்சார்கள் பொருத்தியுள்ளோம். பலூனின் உதவியுடன் பூமியின் வளைவு (Coverage) வரை இது செல்லக்கூடியது. இதில், TH3 22 என்ற சென்சார் வெப்பத்தின் தன்மையைக் கணக்கிடவும், MQ 3, MQ 7 போன்ற வாயுக்களுக்கான சென்சார்களும், Axilometer என்ற சென்சார் திறனும் உள்ளது. இதன் மூலம் வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம், உயரம், திசைவேகம் போன்றவற்றை அறியலாம். இதற்காக கேமராவும், மெமரி கார்டும் கருவியில் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சம் 2 மணி நேரத்திற்குப் பிறகு, பாராசூட் உதவியுடன் செயற்கைக் கோள் கீழிறங்கிவிடும்'.

பெண் முன்னேற்றத்திற்குப் பணியாற்றிய மணியம்மையார் புகழ் எங்கும் பரவவேண்டும் என்பதற்காக இந்தச் செயற்கைக்கோளிற்கு அவர் பெயர் வைத்துள்ளோம். மேலும், எங்கள் விருப்பம் இத்துறையில் அடுத்தடுத்த முன்னேற்றங்களை அடைய வேண்டும் என்பதுதான்" என்றார்கள். சிறப்புரையாற்றிய மயில்சாமி அண்ணாதுரை, ``ஆசியாவிலேயே முதல்முறை பெண்களே இணைந்து செயற்கைக்கோள் வடிவமைத்துள்ளனர். இந்த மாணவிகளின் முயற்சி பாராட்டப்படவேண்டிய ஒன்று. ரஷ்யா போன்ற பிற நாடுகளிருந்து அழைப்பு வரும் அளவிற்கு நாம் தொழில்நுட்பத்தில் சாதனைகளை நிகழ்த்துகிறோம். இவை மேலும், பள்ளி மாணவர்களிடையே, குறிப்பாக, அரசுப் பள்ளி மாணவர்களிடையே மேற்கொள்ளப்படவேண்டும். அதற்கான சாத்தியங்களை அமைக்க வேண்டும்' என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.