இலங்கையில் உள்ள தேவாலயங்களுக்கும் மேலதிக பாதுகாப்பு !

 இலங்கையில்  உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் மேலதிக பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.

இதற்கான பணிப்புரையை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் தற்போது நிலவி வருகின்ற தீவிர நிலையை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து படிமுறைகளையும் முன்னெடுக்குமாறு காவல்துறை, முப்படையினர் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவையும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இதேவேளை, நாட்டில் உள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளும் மூடப்படவுளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் 29 ஆம் திகதி இவை மீளத் திறக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை  கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது

No comments

Powered by Blogger.