தாக்குதல்களின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ்.: பூஜித் ஜய­சுந்­தர!!

நாட்டில் இடம்­பெற்ற தொடர் குண்­டு­வெ­டிப்­புக்­களின் பின்னணியில்  ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வா­தி­களே உள்­ள­தாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர தெரி­வித்­துள்ளார்.


சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் பாரா­ளு­மன்ற கட்­டிடத் தொகு­தியில் நேற்று கட்சித் தலை­வர்கள் கூட்டம் இடம்­பெற்­றது. இதில் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர கலந்­து­கொண்டு தற்போ­தைய நாட்டு நிலை­வரம் தொடர்பில் விளக்க­ம­ளித்­துள்ளார்.

இதன்­போதே இந்த குண்­டு­ வெ­டிப்­புக்­களின் பின்­ன­ணியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வா­தி­களே சம்­பந்­தப்­பட்­டுள்­ளனர். இது விசா­ர­ணை­க­ளி­லி­ருந்தே தெரி­ய­வந்­துள்­ளது என்று பொலிஸ்மா அதிபர் எடுத்­துக்­ கூ­றி­யி­ருக்­கின்றார்.

கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் இடம்­பெற்ற விடயம் தொடர்பில் கருத்து தெரி­வித்த தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ருமான மனோ கணேசன்,குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் உள்­ளமை உறுதிப்படுத்­தப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ்மா அதிபர் கட்சித்தலைவர்கள் கூட்­டத்தில் உறு­தி­பட தெரி­வித்தார்.

இத்­த­கைய தாக்­கு­தல்­களை இல்லாதொழிப்பதற்கும் குற்றவாளிகளை கைதுசெய்வதற்கும் நடவடக்கை எடுக்கப்படுமென்றும் அவர் உறுதி தெரிவித்தார் என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.