உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் வெற்றிகரமாக பரிசோதனை!!

ரஷியாவை சேர்ந்த ரொஸாட்டம் ஸ்டேட் அணுசக்தி கார்ப்பரேசன், உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை உருவாக்கி உள்ளது. பெரும் பொருட்செலவில் மிகப்பெரிய சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் இந்த மிதக்கும் அணுமின் நிலையத்தில், மின்சார உற்பத்தி வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மிதக்கும் அணுமின் நிலையத்தில் சோதனை முயற்சி வெற்றி அடைந்திருப்பது, ரொஸாட்டம் குழுவினரின் மிகப்பெரிய சாதனை என அந்த நிறுவனம் கூறி உள்ளது. அணுமின் நிலைய அமைப்புகள் மற்றும் உபகரணங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, மின்திறன் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளது.   தற்போது முழு உற்பத்தி திறனை பெற்றுள்ள இந்த மிதக்கும் அணுமின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் தொலைதூரத்தில் உள்ள பின்தங்கிய பகுதிகளுக்கு மின்சார வழங்குவதற்கு இந்த அணு உலை முக்கிய பங்கு வகிக்கும்.

No comments

Powered by Blogger.