விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' டிரெய்லர்!

திமிரு பிடிச்சவன்' படத்திற்குப் பிறகு, விஜய் ஆண்டனி நடித்திருக்கும் படம், 'கொலைகாரன்'.
இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியிருக்கிறார். தியா மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் கதாநாயகியாக ஆஷிமா நார்வால் நடித்திருக்கிறார். இது அவருக்கு முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தவிர, அர்ஜுன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வழக்கமாக விஜய்ஆண்டனியின் படங்களுக்கு அவரேதான் இசைமயமைப்பார். ஆனால், இந்தப் படத்திற்கு சைமன் கே. கிங் இசையமைத்துள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் டிரெயிலரை மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் படம் மே மாதம் திரைக்கு வரவிருக்கிறது. இது தவிர, 'மூடர்கூடம்' நவீன் இயக்கத்தில் 'அக்னி சிறகுகள்' படத்திலும் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் 'தமிழரசன்', 'வாய்மை' பட இயக்குநர் ஏ.செந்தில் குமார் இயக்கத்தில் 'காக்கி' உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார், விஜய் ஆண்டனி. 
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.