சூதாட்ட கிளப்புக்கு சென்ற காஜல் அகர்வால்!!

நடிகைகள் சினிமாவில் நடிப்பது மட்டும் அல்லாமல் விளம்பர படங்களில் நடித்தும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். விளம்பரங்களில் நடிப்பதில் சமந்தா, காஜல் அகர்வால் இருவருக்கும் இடையில்தான் தற்போது போட்டி நிலவுகிறது. சில ஆண்டுகளாக காஜல் நடித்து வந்த ஒரு டூத் பேஸ்ட் விளம்பரத்தை சமந்தா கைப்பற்றினார். விளம்பரம் மட்டும் அல்லாது வேறு வகையிலும் ஹீரோயின்கள் சம்பாதிக்க தொடங்கி உள்ளனர். இந்தி கதாநாயகிகள் பெரிய பணக்காரர்களின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கும், நடனம் ஆடுவதற்கும் ஒரு குறிப்பிட்ட தொகை வாங்குகின்றனர். தற்போது சூதாட்ட கிளப்பிற்கு வருவதற்கும் அவர்களுக்கு பணம் கொடுக்கும் வி‌ஷயம் வெளியாகி உள்ளது. இலங்கையில் பிரபலமான கேசினோ (சூதாட்ட கிளப்) உள்ளது. இந்த கிளப்பிற்கு வந்து வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடுவதற்கு பாலிவுட் நடிகைகளுக்கு கோடிகளில் கொட்டித் தரப்படுகிறது. சமீபத்தில் இந்த சூதாட்ட கிளப்புக்கு காஜல் அகர்வால் சென்று வந்து இருக்கிறார்.
Powered by Blogger.