தீவிரவாதியுடன் எப்போது கைகுலுக்கினார் கிழக்கு ஆளுநர்!!

குண்டு வெடிப்பின் சூத்திரதாரியும், அவரின் இயக்கமும் தன்னுடைய அரசியலில் ஒரு போதும் ஆதரவு வழங்கியதும் கிடையாது என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.


மேற்படி விடயம் தொடர்பில் இன்றைய தினம் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும்,

கடந்த வாரம் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து குண்டு வெடிப்பின் சூத்திரதாரி என கருதப்படும் ஸஹ்ரான் என்பவருடன் நான் எடுத்து கொண்ட புகைப்படத்தை பிரசுரித்து என் மீது மிக மோசமாக, அபாண்டமாக பழி சுமத்தி என்னுடைய நற் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் எழுதி வருவதை அவதானித்தேன்.

கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் வேட்பாளராக இருந்தபோது சகல வேட்பாளர்களையும் அழைத்து கலந்துரையாடினர்.

சந்தர்ப்பத்தில் ஒரு வேட்பாளர் என்ற அடிப்படையில் நானும் கலந்து கொண்டேன். ஏனைய இந்த தேர்தலில் போட்டியிட்ட சகல முஸ்லிம் வேட்பாளர்களும் அங்கு கலந்து கொண்டு அவரோடு கலந்துரையாடினார்கள்.

அவ்வாறான கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையே இன்று என் மீது பழிசுமத்துவதற்காக ஊடகங்கள் பிரசுரித்து எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முனைகின்றன.

கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு எந்த சந்தர்ப்பத்திலும் அவரை நான் சந்திக்கவும் இல்லை, அவரின் இயக்கத்திற்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்பதை மிகத்தெளிவாக குறிப்பிட விரும்புகிறேன்.

மேலும் குண்டு வெடிப்பின் சூத்திரதாரியும் அவரின் இயக்கமும் என்னுடைய அரசியலில் எனக்கு ஒரு போதும் ஆதரவு வழங்கியதும் கிடையாது என்பதை சொல்லி வைக்க விரும்புகிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.