வாணி ராணி மானஸ், நீரஜா காதல் கதை!!

"இரண்டு பேருடைய குடும்பத்துல உள்ள பெரியவங்க சம்மதத்துடனும், ஆசீர்வாதத்துடனும் எங்களுடைய திருமணம் நடந்திருக்கிறது ரொம்பவே ஹாப்பியா இருக்கு.
நானும் சரி, மானஸூம் சரி உண்மையிலேயே நமக்கு திருமணம் முடிஞ்சிருச்சானு அதிசயப்பட்டு கேட்டுட்டே இருக்கோம். எல்லாமே கனவு மாதிரி இருக்கு!''

வாணி ராணி' சரவணனாக மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் மான்ஸ் சாவலி. பல சீரியல்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். இவருக்கும், இவருடைய காதலி நீரஜாவிற்கும் கடந்த திங்கள்கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது. இது குறித்து கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்வதற்காக மானஸ் - நீரஜாவைச் சந்திக்கச் சென்றோம்.

``எங்களுடைய பத்து வருடக் கனவு இன்று நிறைவேறியிருக்கு'' என ஒரு சேரப் புன்னகைத்தவர்களிடம் உங்களுடைய காதல் கதையைச் சொல்லுங்களேன் எனக் கேட்டோம்.

``நான் நீரஜாவை ஸ்கூல் ஈவன்ட்லதான் பார்த்தேன். அவங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. என் ஸ்கூல் இவங்க வீட்டுக்கு பக்கத்துல இருந்துச்சு. இவங்க ஸ்கூல் என் வீட்டுக்கு பக்கத்தில் இருந்துச்சு. அதனால இவங்க ஸ்கூலுக்குப் போகும் போதும், வரும் போதும் பார்த்துட்டே இருப்பேன். பிப்ரவரி 14-ம் தேதி இவங்ககிட்ட புரொபோஸ் பண்ணேன். இவங்க உடனே ஓகே சொல்லலை. கொஞ்சம் யோசிச்சு ஓகே சொன்னாங்க. இப்படித்தான் எங்க லவ் ஆரம்பமானது'' என்றதும் நீரஜா தொடர்ந்தார்.

``ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டோம். அவர் மீடியாவிற்கு வருவதற்கு முன்னாடியே நாங்க காதலிக்க ஆரம்பிச்சிட்டோம். நாங்க பர்சனலையும், கரியரையும் சேர்த்துக் குழப்பிக்கிட்டது கிடையாது. கரியர் வேற, பர்சனல் லைஃப் வேறங்குறதுல நாங்க ரொம்பவே தெளிவா இருக்கோம். இரண்டு பேருடைய குடும்பத்துல உள்ள பெரியவங்க சம்மதத்துடனும், ஆசீர்வாதத்துடனும் எங்களுடைய திருமணம் நடந்திருக்கிறது ரொம்பவே ஹாப்பியா இருக்கு. நானும் சரி, மானஸூம் சரி உண்மையிலேயே நமக்கு திருமணம் முடிஞ்சிருச்சானு அதிசயப்பட்டு கேட்டுட்டே இருக்கோம். எல்லாமே கனவு மாதிரி இருக்கு'' என்றதும் மானஸ் தொடர்ந்தார்.

``இதுவரைக்கும் நானும், நீரஜாவும் தனித்தனியா இருந்தோம். இப்போ நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு லைஃப் ஆரம்பிக்கப் போகிறோம் என்கிற போது எங்களுக்குள்ளே நிறைய பொறுப்பு வந்துருக்கு. இது தேவையா, தேவையில்லையான்னு யோசிச்சு முடிவெடுக்க ஆரம்பிச்சிருக்கோம்'' என்றவரிடம் திருமணத்திற்கு வந்த செலிபிரிட்டிகள் குறித்துக் கேட்டோம்.

``நிறைய செலிபிரிட்டிகள் எங்க திருமணத்திற்கு வந்திருந்தாங்க. எல்லோருக்கும் எங்க நன்றியைத் தெரிவிச்சிக்கிறோம். குறிப்பிட்டு சொல்லணும்னா, `வாணி ராணி' டீம், ராதிகா மேம் வந்தது ரொம்பவே ஹாப்பியா இருந்துச்சு. ரொம்ப எமோஷனலான தருணம்னா பப்லு சார் வந்தது. பப்லு சார் `வாணி ராணி' சீரியலில் எனக்கு அப்பாவாக நடிச்சிருப்பார். அவர் கூட நான் ரொம்பவே குளோஸ். அவர் என் திருமணத்திற்கு வரணும்னு எதிர்பார்த்தேன். அவர் வந்தது செம எமோஷனல் தருணமா இருந்தது'' என்றவர் ஹனிமூன் பிளான் குறித்துப் பேசினார்.

``ஹனிமூனுக்கு கொஞ்சம் பெரிய பிளான் வைச்சிருக்கோம். இன்னைக்கே ஹனிமூன் டிரிப் கிளம்புறோம். கிட்டத்தட்ட எட்டு இடங்களுக்கு மேல சுற்றிப்பார்க்கச் செல்கிறோம். இருபத்து ஐந்து நாள்கள் டிரிப்பிலேயேதான் இருக்கப் போகிறோம்'' என்றார். இருவரிடமும் பரிமாறிக் கொண்ட கிஃப்ட் குறித்துக் கேட்டோம்.

``நீரஜா எனக்குக் கல்யாணம் முடிஞ்ச உடனே ஐபோன் கிஃப்ட் பண்ணாங்க. அது நான் கொஞ்சமும் எதிர்பார்க்காத பரிசு" என மானஸ் கூறவும், நீரஜா தொடர்ந்தார். "நான் ஏதாவது பிடிச்சிருக்குன்னு சொன்னேன்னா அதை அப்படியே ஞாபகம் வைச்சு சர்ப்ரைஸா வாங்கிக் கொடுப்பார். அவர் வாங்கிக் கொடுத்த எல்லாமே என் ஃபேவரைட்!'' என்றார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.