சஹ்ரானின் தந்தை மற்றும் சகோதரர்கள் உயிரிழப்பு

கல்முனை சாய்ந்தமருதில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள், குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் தந்தையும் சகோதரர்களுமென ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


இதனை இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் மைத்துனர் நியாஸ் ஸெரிப் ரொய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்ததாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் சஹ்ரானின் சகோதரர்களான Zainee Hashim, Rilwan Hashim என்பவர்களும் அவரின் தந்தையான Mohamed Hashim என்பவருமே உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சமூக வளைத்தளங்களில் தற்போது பரவி வரும் பயங்கரவாதிகள் வெளியிட்டுள்ள காணொளியில் காணப்படுபவர்கள் இவர்களே என்றும் சஹ்ரானின் மைத்துனர் ரொய்டர்ஸிடம் குறிப்பிட்டுள்ளார்.

கல்முனை- சாய்ந்தமருதில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற துப்பாக்கிச் சமரில் 15 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்த சம்பவத்தில் ஆறு ஆண்களும் மூன்று பெண்களும் ஆறு சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 4 பயங்கரவாதிகள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். இந்நிலையிலேயே அதில் உயிரிழந்தவர்கள் சஹ்ரானின் சகோதரர்கள் மற்றும் தந்தையென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.