கோடை விழாவுக்கு தயாராகும் ஊட்டி!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 123 மலர்கள், 25 ஆயிரம் மலர் தொட்டிகள், மலர் கண்காட்சிக்காக தயார் .நிலையில் உள்ளன.
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். மே மாதம் முழுவதும் சுமார் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை புரிகின்றனர். சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி மற்றும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில்  உலக புகழ் பெற்ற மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.இந்த ஆண்டு தேர்தல் பணி காரணமாக ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி,வாசனைத் திரவிய கண்காட்சி போன்றவற்றை ரத்து செய்வதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது
.பூக்கள்
எனவே மே 17ம் தேதி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறவுள்ள 123வது மலர் கண்காட்சியை சிறப்பாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 17 ம் தேதி துவங்கி 5 நாட்கள் நடைபெறும் 123 மலர் கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைக்கவுள்ளார். சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சைக்லமன், சினரேரியா, ஜெரோனியம், கிலக்ஸ்சீனியா, ரெனங்கிளாஸ், பேன்சி உட்பட 230 வகையான விதைகள் ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து பெறப்பட்டு நடவு செய்து பராமரித்து வருகின்றனர்
பூங்கா
மேலும் கோடை சீசனுக்காக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தற்போது 25 ஆயிரம் தொட்டிகளில் மலர் நாற்றுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தொட்டிகளிலும் மொட்டுகள் மற்றும் மலர்கள் காணப்படுகிறது. ஓரிரு நாட்களில் அனைத்து செடிகளிலும் மலர்கள் பூத்து குலுங்கும் நிலையில் உள்ளன. 
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.