திண்டுக்கல் அருகே எதிர்வீட்டு பையனால் உயிரிழந்த 12 வயது சிறுமி!
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 12 வயது சிறுமி. தற்போது விடுமுறை என்பதால் சிறுமி வீட்டில் இருந்துள்ளார். கடந்த 16ம் தேதி பெற்றோர்கள் வேலைக்குச் சென்றுவிட வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
வீட்டில் இருந்தவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மின்சாரம் பாய்ச்சி கொலை செய்யப்பட்டிருக்கிறார். மாலை வீடு திரும்பிய அவரது தாய் சிறுமியின் இறந்து கிடந்ததை பார்த்துக் கதறியிருக்கிறார். காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள். இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறை தயங்குகிறது உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனத் திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு சிறுமியின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டார்கள்.
தொடர்ந்து மாவட்ட எஸ்பியிடம் மனு கொடுத்தார்கள். அதன் பிறகு வேகமாகச் செயல்பட்ட போலீஸார் சிறுமியின் வீட்டிற்கு எதிர் வீட்டில் இருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் கிருபாகரனை கைது செய்துள்ளனர். கிருபாகரனிடம் விசாரித்த போது அவனது வாக்குமூலத்தைக் கேட்டு போலீஸார் அதிர்ந்து போயிருக்கிறார்கள். ``பாலியல் பலாத்காரம் செய்த பிறகு உண்மையை வெளியே சொல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகச் சிறுமியின் தலையைச் சுவரில் முட்டினேன். தலையணையை வைத்து முகத்தில் அழுத்தினேன். அப்போதும் சாகவில்லை. அதன் பிறகு மின்சார வயரை பிளக்கில் மாட்டி மூக்கிலும் வாயிலும் வைத்தேன். அண்ணே.. வேண்டாம் கரண்ட் வைக்காதீங்க விட்டுங்கன்னு அந்த பிள்ளை கதறிச்சு. ஆனாலும் உண்மையை வெளியே சொன்ன பிரச்னை ஆகிடும்னு பயந்து கரண்ட் வெச்சு கொன்னுட்டேன்" என வாக்குமூலத்தில் சொல்லியிருக்கிறான்.
இது தொடர்பாக பேசிய சிறுமியின் தந்தை, "மிருகம் மாதிரி நடந்திருக்கான் அந்த பையன். அவன் வீட்டுல ரத்தக்கரை படிஞ்ச துணிகளை போலீஸ் எடுத்திருக்காங்க. சின்ன பிள்ளையை நாசம் பண்ணி கொன்னுட்டானுங்க. ஒருத்தனை தான் கைது செஞ்சிருக்காங்க. அவனோட நண்பர்களுக்கும் இதுல தொடர்பு இருக்கு. ஆனா போலீஸ் கைதுசெய்யாம இருக்காங்க" என்றார்.
இந்த கொடூர செயலைச் செய்த குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் எனப் போராட்டம் நடத்திய முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, " சினிமாவை மிஞ்சும் வகையில் இந்த கொடுமை நடந்துள்ளது. இது கடும் கண்டனத்திற்கு உரியது. காட்டுமிராண்டித் தனமான செயல். இதில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட வேண்டும். இல்லையென்றால் மாவட்ட அளவில் போராட்டம் நடத்துவோம்" என்றார்.
12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த சம்பவம் தமிழக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை