பிரபாகரனை புகழும் சிங்களத் தலைவர்கள்!!
இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதிகளின் குண்டு வெடிப்பு தாக்குதல் நமது போராளித் தெய்வங்களின் உன்னதத்தையும் மகத்துவத்தையும் சிங்கள அரசுக்கும் சிங்கள மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் எடுத்துரைத்துள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகள், அப்பாவி மக்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடாத்தியுள்ளனர்.
விடுதலைப் புலிகள் இயக்கமானது, ஒருபோதுமே அப்பாவி மக்களை இலக்கு வைத்து எந்த தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை. கொழும்பு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை தாக்கி அழித்த சமயத்தில்கூட ஒரு சிங்களப் பொதுமகனும், வெளிநாட்டவரும் சிறு காயத்திற்குகூட உள்ளாகவில்லை. அதுதான் விடுதலைப் புலிகள் இயக்கம்.
ஆனால் சிங்கள இராணுவம் தமிழீழ மண்ணில் புலிகளை தாக்குகிறோம் என்று சொல்லி நடத்தியவை எல்லாமே இன அழிப்புத்தான். உண்மையில் அதை சிங்கள அரசு தெரிந்தே செய்தது. புலிகளை அழித்தாலும் மக்களை அழித்தாலும் சிங்கள அரசுக்கு ஒன்றுதான். புலிகளும் மக்களும் வேறுவேறல்ல, தமிழ் இனத்தையே அழிக்க வேண்டும் என்பதே நோக்கு.
இலங்கையில் தற்போது இடம்பெற்றுள்ள பயங்கரவாத தாக்குதல்களையடுத்து, இலங்கை அரசு சார்பானவர்களும், குறிப்பாக விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் பங்கெடுத்த மகிந்த ராஜபக்ச மற்றும் சரத்பொன்சேகா போன்றவர்கள், விடுதலைப் புலிகளின் உன்னதமான பக்கங்களை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இந்த இனப்படுகொலையாளிகன் கருத்து முக்கியமானது. விடுதலைப் புலிகள் ஒருபோதும் இத்தகைய தாக்குதலை மேற்கொள்ளவில்லை என்றும் இறுதி யுத்த காலத்தில், இவ்வாறான தாக்குதல்களை நடாத்த அவர்களால் முடிந்தபோதும், அதை அவர்கள் தவிர்த்துக் கொண்டனர், என்று மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். ஆக, போரில் அப்பாவி பொதுமக்களை கொல்வதை அரசைப் போல புலிகள் நிபந்தனையாக கொல்லவில்லை என்பதை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
அதைப்போல, புலிகளுக்கு அரசியல் ரீதியாக ஒரு நோக்கம் இருந்தது, அவர்களின் கட்டுபாட்டில் நிலம் இருந்தது, தமிழ் மக்களின் உரிமைக்காக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர், அவர்கள் இவ்வாறு பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்ளவில்லை என்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
முன்னர் ஒரு தடையும் தலைவர் பிரபாகரன் சிறந்த தலைவர், இறுதிவரை தன்னுடைய மக்களுக்காக நின்று போராடியவர், தனிப்பட்ட ரீதியில் தம்மை பழிவாங்கவில்லை என்றும் பொன்சேகா கூறினார்.
இதைப்போல சிங்களப் பேரினவாத கடும்போக்குடைய பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர் கூட விடுதலைப் புலிகள் சிறந்த தலைவர் என்றும் மக்களுக்காக கடுமையாக போராடியவர் என்றும், முல்லைத்தீவில் பிறந்திருந்தால், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுடன் இணைந்து போராடியிருப்பேன் என்றும் கூறினார்.
எனவே விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கமல்ல, அவர்கள் விடுதலைப் போராளிகள் என்பதை பலரும் ஏற்றுக் கொண்டனர். புலிகளை பயங்கரவாதிகளாக அறிவித்த மகிந்த புலிகளை ஏற்றுக்கொள்கிறார். எனவே இலங்கை அரசை ஆதாரமாக கொண்டு புலிகளை பயங்கரவாத பட்டியலில் அறிவித்த சர்வதேச நாடுகளும் அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுவே ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான விடுதலையையும் நீதியையும் ஏற்படுத்துகின்ற பயணத்திற்கு உதவும்.
போர் முடிந்து பத்தாண்டுகளில் புலிகளை ஏற்றுக்கொள்ளுகிற சூழல் வந்துவிட்டது. இதுவே ஈழப் போராட்டத்தின் வெற்றி. தலைவருக்கு சிங்கள மக்களே சிலை வைக்கின்ற, சிங்கள அரசே சிலை வைக்கின்ற காலமொன்று வரும். உலகின் தலை சிறந்த போராளியாக இவ் உலகே அங்கீகரிக்கின்ற நிலமை ஒன்று வரும். ஈழத் தமிழ் மக்களின் போராட்டம் உன்னதமானது. அது ஒருபோதும் வீண் போகாது.

.jpeg
)





கருத்துகள் இல்லை