ஏ9 வீதியில் பயணப்பையால் பதற்றம்!!

வவுனியா ஏ9 வீதியில் சாந்தசோலை சந்திக்கு அருகாமையில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் அநாதரவாக கிடந்த பயண பொதியினால் பெரும் பதட்டம் ஏற்பட்டதோடு வாகன போக்குவரத்துக்களும் சுமார் அரை மணிநேரம் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.

பேருந்து தரிப்பிடத்தில் பாரிய பயண பொதியொன்று உரிமை கோரப்படாத நிலையில் நீண்ட நேரமாக காணப்பட்டமையால் அருகில் உள்ள இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட இராணுவத்தினர் ஏ9 வீதியில் போக்குவரத்தை தடை செய்ததோடு குறித்த பகுதியில் பாதுகாப்பையும் பலப்படுத்தி பொதியை பரிசோதனை செய்தனர்.

இதன் போது குறித்த பயண பொதியினுள் ஆபத்தான பொருட்கள் ஏதும் இல்லை என தெரியவந்த நிலையில் ஓமந்தை பகுதியில் இருந்து வருகைதந்த இளைஞன் ஒருவன் குறித்த பொதி தன்னுடையது எனவும் பயணத்திற்காக காத்திருந்த போது பேருந்தை தவறவிட்டமையினால் தனது குடும்பத்தினரை பேருந்தில் ஏற்றுவதற்காக மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்ற சமயம் குறித்த பொதியை இங்கு வைத்து சென்றதாக இராணுவத்தினரிடம் தெரிவித்தார்.



இதனையடுத்து சம்பவ இடத்திற்கு அவரது மனைவியும் மகளும் வருகைதந்த நிலையில் அவர்கள் தொடர்பாக இராணுவத்தினர்  தகவல்களை பெற்றதன் பின்னர் அங்கிருந்து செல்ல அனுமதித்திருந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.