மத்திய நாடுகளுக்கு அமெரிக்க வழங்கிய நிதி உதவியை நிறுத்திய டிரம்ப்!!

மெக்சிகோ வழியாக எல்சால்வேடர், கவுதமலா, ஹோண்டுராஸ் உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து மக்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்து அடைக்கலம் கோருகின்றனர். அதை தடுத்து நிறுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
எல்சால்வேடர் உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து
சட்டவிரோதமாக பலர் நுழைவதால் மெக்சிகோ எல்லையை மூடப்போவதாக டிரம்ப் சமீபத்தில் மிரட்டல் விடுத்து இருந்தார். இந்த நிலையில் எல்சால்வேடர், ஹோண்டுராஸ் கவுதமலா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்காவால் வழங்கப்பட்டு வந்த நிதி உதவி நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, அதிபர் டிரம்பின் வழிகாட்டுதலின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எம்.பி.க்கள் மற்றும் பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெற்று இந்த 3 நாடுகளுக்கு வழங்கப்படும 700 மில்லியன் டாலர் நிதி உதவி முற்றிலும் நிறுத்தப்படும் என்று அவர் கூறினார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.