குவாய்டோவுக்கான சட்டப் பாதுகாப்பை நீக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை!!

வெனிசூலா நாடாளுமன்றத் தலைவரும், அந்த நாட்டின் இடைக்கால அதிபராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டவருமான ஜுவான் குவாய்டோவுக்கான சட்டப் பாதுகாப்பை விலக்க அந்த நாட்டு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

இதன் மூலம், குவாய்டோ மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து, அவரை கைது செய்ய அதிபர் நிக்கோலஸ் மடூரோவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து வெனிசூலா உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: வெனிசூலாவை விட்டு வெளியேறக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர்
எனினும், அந்தத் தடையை மீறி ஆர்ஜென்டீனா, பிரேசில், கொலம்பியா, ஈக்வடார், பராகுவே ஆகிய நாடுகளுக்கு கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் குவாய்டோ பயணம் செய்துள்ளார். இந்த விதி மீறல் காரணமாக, நாடாளுமன்றத் தலைவர் என்ற முறையில், சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில் இருந்து அவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை அரசு விலக்கிக்கொள்ளலாம் என்று அந்த நீதிமன்றம் தெரிவித்தது.
வெனிசூலாவில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிக்கோலஸ் மடூரோ, கடும் எதிர்ப்புக்கிடையே கடந்த ஜனவரி மாதம் மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதையடுத்து, நியாயமான முறையில் அதிபர் தேர்தல் மீண்டும் நடத்தப்பட வேண்டும் எனவும், அதுவரை நாட்டின் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்பதாகவும் நாடாளுமன்றத் தலைவர் ஜுவான் குவாய்டோ அறிவித்தார்.
இதனால் அந்த நாட்டில் பெரும் அரசியல் பதற்றம் நிலவி வருகிறது.
இந்தப் பிரச்னையில் அதிபர் நிக்கோலஸ் மடூரோவுக்கு ரஷியா உள்ளிட்ட நாடுகளும், ஜுவான் குவாய்டோவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்தச் சூழலில், அதிபர் மடூரோவுக்கு உதவியாக சுமார் 100 ரஷிய ராணுவ வீரர்கள் வெனிசூலா அனுப்பப்பட்டனர். இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
இந்தச் சூழலில், ஜுவான் குவாய்டோவை நாடாளுமன்றத் தலைவர் பதவியிலிருந்து நீக்கியதாக அதிபர் மடூரோ அண்மையில் அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக, குவாய்டோவுக்கான சட்டப்பாதுகாப்பை விலக்கிக் கொள்ள உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது அங்கு நிலவி வரும் அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.ஜுவான் குவாய்டோவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #ColomboPowered by Blogger.