நாட்டை துண்டாட முயல்வோருக்கு நந்திக்கடலில் நேர்ந்த நிலைமையே ஏற்படும் – கமால் குணரத்ன!!

நாட்டை துண்டாட முயல்வோருக்கு 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நந்திக்கடலில் நேர்ந்த நிலைமையே ஏற்படும் என ஓய்வுபெற்ற இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான வியத்மக அமைப்பு ‘நாடும் – நாளையும்’ என்ற தலைப்பில் நாடு தழுவிய ரீதியில் நடத்தத் தீர்மானித்த கருத்தரங்கின் முதலாவது அமர்வு பியகமவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கமால் குணரத்ன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரித்தானியாவில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ கழுத்தை அறுப்பது போன்ற சைகையை காண்பித்து அங்கிருந்து சென்றார்.
எமது நாட்டில் நல்லிணக்கம் தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளும் பலரும், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் அந்த செயல் இராஜதந்திர செயற்பாடுகளுக்கு பொருத்தமற்றது என்றும், கீழ்த்தரமான செயல் என்றும் குற்றம்சாட்டினர்.

தனது தாய்நாட்டின் தேசியக் கொடியை கீழே போட்டு மிதித்துக்கொண்டிருப்பதை கண்டதும் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கும் இராணுவ அதிகாரியொருவர் இருந்தால், அந்த நபர் இராணுவ அதிகாரியாக இருக்க முடியாது.

காட்டிக்கொடுப்பது தொடர்பாக நீண்ட வரலாற்றைக்கொண்ட இவர்களது முழுமையான பட்டியலை நான் இங்கு கூறப்போவதில்லை. வெளியுறவு அமைச்சர் அங்கு சென்று ஜெனீவாத் தீர்மானத்தின்படி வெளிநாட்டு நீதிபதிகளை இணைத்துக்கொள்ள எமது நாட்டின் அரசியல் சாசனத்தில் இடமில்லை என்று அறிவித்தார்.

மேலும் நாட்டை இரண்டாக பிரிப்பதாகக் கூறிக்கொண்டு வந்த பிரபாகரனை 2009ஆம் ஆண்டு நந்திக்கடலில் இல்லாது செய்த எங்களுக்கு நாட்டை நான்காக பிரிப்போமென கூறி கொண்டு வருவோரால் நாங்கள் முன்னெடுக்கும் செயற்பாட்டை தாங்க முடியாது” என்றும் அவர் கூறினார்.
இறுதி போரில் 53ஆவது படையணியை வழிநடத்திய கமால் குணரட்ன மீதும் பல்வேறு போர் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.