அண்ணா பல்கலை முறைகேடு!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த தேர்வுத்தாள் முறைகேடு விவகாரத்தில் தொடர்புடைய 130 மாணவர்களின் தேர்வு முடிவுகள் செல்லாது என்று அறிவித்து, அவர்களது பட்டங்களை ரத்து செய்துள்ளது பல்கலைக்கழக நிர்வாகம்.


2017, 2018ஆம் ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பொறியியல் தேர்வுகளில் விடைத்தாள்களை மாற்றி வைத்து முறைகேடு நடந்ததாகப் புகார் எழுப்பப்பட்டது. 40 பக்கங்கள் கொண்ட விடைத்தாளில் ஓரிரு பக்கங்களில் மட்டும் பதில்களை எழுதி மாணவர்கள் அளித்ததாகவும், சில நாட்கள் கழித்து தற்காலிகப் பணியாளர்கள் உதவியுடன் விடைத்தாளின் காலியான பக்கங்களில் சரியான பதிலை மாணவர்கள் எழுதியதாகவும், இதற்காக 15,000 முதல் 40,000 ரூபாய் வரை அவர்களிடம் இருந்து பணம் பெறப்பட்டதாகவும் கூறப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஒரு விசாரணைக் குழுவை அமைத்தார்.
இந்த குழுவினர் நடத்திய விசாரணையின்போது, பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட 7 மண்டலங்களில் தேர்வுக்காலத்தில் பணியமர்த்தப்பட்ட தற்காலிக உதவியாளர்களின் துணையுடன் இந்த முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது. தேர்வு ஒருங்கிணைப்பாளராக இருந்த தனியார் கல்லூரி விரிவுரையாளர் சுரேஷ் இதற்கு உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, முறைகேட்டில் ஈடுபட்ட 37 தற்காலிகப் பணியாளர்களை நீக்கம் செய்தது அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம். எந்த கல்லூரியிலும் சுரேஷுக்கு பணி வழங்கக் கூடாது என்று கல்லூரிகளுக்கு ஆணை பிறப்பித்தது.
இந்த நிலையில், தற்போது இந்த முறைகேட்டில் தொடர்புடைய 130 மாணவர்களின் தேர்வு முடிவுகள் செல்லாது என்றும், அவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்றும் அறிவித்துள்ளது அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம். இந்த மாணவர்களின் பட்டம் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.