தமிழீழ விடுதலை புலிகள் மீணடும் காணிகளையும், நிறுவனங்களையும் கொள்வனவு -இனவாதிகளால் புதிய சா்ச்சை.!!

இலங்கையில் உள்ள சிலங்களையும், நிறுவனங்களையும் தமிழீழ விடுதலை புலிகள் கொள்வனவு செய்கிறாா்கள். என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினா் விமல் வீரவன்ச புலிகளுக்கும், திருடா்களுக்குமே இந்த அரசாங்கம் எல்லாவற்றையும் விற்கிறது என கூறியுள்ளாா்.


நேற்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

யுத்தம் இருந்த போதும்கூட நாம் நாட்டினை கடன் நெருக்கடிக்குள் தள்ளாது பாதுகாத்தோம் ஆனால் இந்த ஆட்சியில் எந்த அச்சுறுத்தலும் இல்லாது கடன்களை அதிகரித்துள்ளனர்.

ஆசிய நாடுகளில் மிகவும் மோசமான பொருளாதார வளர்ச்சி எமது நாட்டில் மட்டுமே உள்ளது.

இதற்கு மத்திய வங்கி ஊழலும் பிரதான காரணமாகும். மத்திய வங்கி ஊழல் வாதிகளை இன்று அரசாங்கம் பாதுகாத்து வருகின்றது. பாதுகாப்பது மட்டும் அல்ல பரிசும் கொடுக்கப்படுகின்றது.

நுவரெலியாவில் தேயிலை தோட்டம் வழங்கப்பட்டுள்ளது. களவுகளை மேலும் முன்னெடுக்கக் கூறி அரசாங்கமே ஊக்குவிக்கின்றது.

நாட்டில் மின் தட்டுப்பாடு எற்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவை அனைத்துமே சதிகளின் மூலமாக முன்னெடுக்கப்படுகின்றன.

பொதுமக்களை அழுத்தங்களுக்கு உட்படுத்தவே முயற்சித்து வருகின்றனர். வாய் திறந்தால் டிஜிட்டல் அபிவிருத்தி என்று கூறுகின்றனர் ஆனால் அனலொக் திட்டம் கூட இவர்களிடம் இல்லை.

இலங்கையின் வளங்களை விற்பதும் நாட்டின் நிலங்களை விற்பதும் மட்டுமே இவர்களின் திட்டமாக உள்ளது. இப்போது இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தை விற்கவும் முயற்சித்து வருகின்றனர்.

லைக்கா நிறுனவத்திற்கு இதனையும் விற்கப்போகின்றனர். இவை அனைத்துமே புலிகளின் பணம். இதனைக் கொண்டே நாடு விற்கப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.