முதல் கறுப்பின முஸ்லிம் பெண் கால்பந்து நடுவர்!


பிரித்தானியாவின் முதல் கறுப்பின முஸ்லிம் பெண் கால்பந்து நடுவர் என்ற பெருமையை ஜவஹிர் ரோப்ளே பெற்றுள்ளார். முஸ்லிம் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் சமூகம் ரீதியான தடைகளையும் மீறி அவர் இந்த பெருமையை பெற்றுள்ளார். இதன்மூலம் பிரித்தானியாவின் முதல் கறுப்பின, முஸ்லிம், ஹிஜாப் அணியும் பெண் நடுவர் என்ற சிறப்பினையும் அவர் பெற்றுள்ளார் என்பது விசேடமானது. இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள ஜவஹிர் ரோப்ளே, ‘முதன்முதலில் நான் கால்பந்து ஆட்ட நடுவரானபோது விளையாட்டு வீரர்கள் என்னை பார்த்த விதம் அதிர்ச்சியாகவும், வியப்பாகவும் இருந்தது’ என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த துறையில் தாம் இன்னும் இன்னும் சாதிக்க துடிப்பதாகவும் ஜவஹிர் ரோப்ளே என்ற பிரித்தானியாவின் முதல் கறுப்பின முஸ்லிம் பெண் கால்பந்து நடுவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.