பிரெக்ஸிற் நெருக்கடி – அவசரமாக மேர்கலை சந்திக்கின்றார் பிதாமர் மே!


ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான நெருக்கடிநிலைக்கு தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் முகமாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ஜேர்மன் அதிபர் அங்கெலா மேர்கலை சந்திக்கவுள்ளார். அந்தவகையில் பிரெக்ஸிற் தீர்வு காண்பது தொடர்பாக இன்று(செவ்வாய்க்கிழமை) பேர்ளினில் குறித்த முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் அரசாங்கம் இது குறித்த அறிவிப்பினை உத்தியோகப்பூர்வமாக இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது. ஜேர்மனிக்கு 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஒத்துழைப்பு எப்பொழுதும் முக்கியமானதாக இருக்கின்றது எனவே இது குறித்த விவாதங்களே நாளை நடைபெறும் என்றும் ஜேர்மன் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். மேலும் பிரெக்ஸிற்ருக்கு பின்னர் ஜேர்மன் பிரித்தானியாவுக்கு நெருக்கமாக இருக்கவேண்டும் என விரும்புவதாகவும் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் சீபெர்ட் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.