பயங்கரவாத தாக்குதலில் பலியான மக்களுக்கு டென்மார்க் கேர்ணிங் நகரில் அஞ்சலி நிகழ்வு!!

சிறிலங்காவிலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் பயங்கரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட அனைத்து  மக்களுக்கும் மற்றும்  டென்மார்க் நட்டின் ஒரே குடுப்பத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளும் கொல்லப்பட்டதை  நினைவு கூர்த்து இன்று கேர்ணிங் நகரில் வணக்க நிகழ்வு நடைபெற்றது.


இந்த நிகழ்வில்  பத்து வருடங்களுக்கு முன்பு  நாட்டில் தமிழ்மக்கள் சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்டதையும் தொடர்த்தும் இத்தாக்குதலிலும் அதிகமாகக் கொல்லப்பட்டவர்கள் தமிழ் மக்களே.தமிழ் மக்களே இனப்படுகெலைக்கு உள்ளாகின்றார்கள், என்ற கருத்தினையும் முன் வைக்கப்பட்டுள்து.

பயங்கரவாத இத்தாக்குதலைக் கண்டிக்கும் ஒவ்வொரு நாடுகளும் சிங்கள அரசாங்கத்தின் அதன் இராணுவத்தின், அதன் அதிகாரிகளின், பயங்கரவாத நடவடிக்கைகளையும் கண்டிக்கவேண்டும். அதற்கான அனைத்துலக விசாரணையை முன்னெடுக்கவேண்டும்.

இத்தாக்குதல் சம்பந்தமான பல சந்தேகங்கள் இருந்தாலும் சிறிலங்கா அரச பயங்கரவாதிகள் தங்கள் அரசியல் இலக்கை அடைவதற்காக எத்தகைய நாசகாரச் செயல்களையும் செய்வார்கள் என்பது வரலாறு எமக்குக் கூறும் பதிவாக உள்ளது.

No comments

Powered by Blogger.