பிரான்ஸில் 115 கலைஞர்கள் மேடையில் இணைந்த "திருப்பாடுகளின் நாடகம்!!

அரங்கம் நிறைந்த கலாரசிகர்களுடன் 07.04.19 பிரான்ஸில் 115 கலைஞர்கள் மேடையில் இணைந்த "திருப்பாடுகளின் நாடகம் மேடையே-றியது பலரதுபாராட்டுகள் மகிழ்வில் டேமீயன் சூரி(நெறியாளர்) அவர்கள் மற்றும் பெஞ்சமின் இமானுவேல் அவர்கள், திருமறைக்கலாமன்ற உறுப்பினர்கள்3 மாத தொடர் ஒத்திகையில் பிரான்ஸ் திருமறைக்கலா மன்றத்தின் 07.04.19 அன்று 115 கலைஞர்கள் சிறுவர்கள் பெரியவர்கள் பெண்கள் என பங்கெடுத்துக் கொண்ட "வெள்ளியில் ஞாயிறு "திருப்பாடுகளின் நாடகம் மேடையேறியது.

சரியாக மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகிய நாடகம் தொடர்ந்து 4 மணித்தியாலங்கள் நடைபெற்றது. யேசுவின் கதையை மற்ற மதத்தவர்களும் இலகுவாக அறிந்து கொள்ளும் வகையில் சிறப்பான உரையாடல் கதை மேடைக்கான வடிவாக்கம். பிரதியாக்கம் நீ.மரியசேவியர் அடிகளார், உதவி யோ.யோன்சன் ராஜ்குமார்.

இவ் நாடகத்தில் இரண்டு பிரெஞ்சு நடிகர்களும் முதல் முறையாக இணைந்திருந்தது மிகச்சிறப்பு.

30 க்கு மேற்பட்ட சிறுமிகளின் ஒருங்கிணைவில் நடனங்கள் இறிதியில் இணைக்கப்பட்டது அதிசிறப்பைச் சேர்த்திருந்தது. அதை வடிவமைத்த ஆசிரியைக்கு பாராட்டுகள்.

ஒப்பனை உடையலங்காரமென்று அந்தப்பக்கத்தை சிறப்பித்தவர்கள் பெஞ்சமின் இமானுவேல், N,T,குணம், அருளானந்தம் (அருள் அண்ணர்) கமீலெஸ் ஆகியோர்,
ஒலி அமைப்பு ரஞ்சன்
பின்னணி இசை : டானியல்
ஒளியமைப்பு மனோதாஸ், ஓசை மனோ,
அரங்க அமைப்பு :தாசன், அன்ரன் ராஜ், இன்னும் பலர்.
சிறப்பாக அனைத்து கலைஞர்களும் சிறப்பாக நடித்திருந்தார்கள்.
இதில் நானும் (கே.பி. லோகதாஸ்) கைப்பாஸ் வேடத்தில் நடித்திருந்தேன்.
வெள்ளியில் ஞாயிறு " நாடகம் பற்றி பல ரசிகர்களின் ஒற்றை விமர்சனம்
4 மணித்தியாலங்கள் ஒரு திரைப்படத்தை பார்ப்பது போன்ற நினைப்பை, நிறைவை தந்தது.

இன்னொரு தரப்பு விமர்சனம் இது: புலம்பெயர் நம்மவர்கள் நாடக வரலாற்றில் ஒரு நாடகத்தில் அதிக கலைஞர்கள் பங்கெடுத்து கொண்ட சாதனை நாடகம் இது.
எது எப்படியோ சபாஷ் டேமீயன் சூரி TEAM.
இறையாசியுடன் கூடிய நல்வாழ்த்துக்கள்
பி.கு கலைஞர்கள் மன்னித்தருள்க அனைவரின் ஒளிப்படங்களையும் இணைக்கமுடியாமைக்கு எனக்கு கிடைத்தவை மட்டும் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.(K.P.L)
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.