யாழில் தற்கொலை குண்டுதாரியின் தோற்றத்தில் நுழைந்தவரை தேடுகின்றது பாதுகாப்பு பிரிவு!!!

யாழ் குடாநாட்டில் குண்டுவெடிப்பின் பிரதான சந்தேக நபரை தேடி முப்படையினரும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். புதன்கிழமை (22) இரவு நவீன ரக கார் ஒன்றில் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மௌலவி  சஹ்ரானின் தோற்றமுடைய ஒருவர், அங்குள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு வந்து சென்றதாக பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பொலிஸாரிடம் தெரிவித்ததை அடுத்து சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த மாணவனிடம் மௌலவி ஸஹ்ரானின் தோற்றத்தை உடைய நபர் தௌஹீத் பள்ளிவாசல் உள்ள அமைவிடத்தை விசாரித்ததுடன் ஏனைய பள்ளிவாசல் எத்தனை யாழ்ப்பாணத்தில் இருக்கின்றது என கேட்டு தான் எதிர்வரும் நோன்பு காலத்திற்கு உதவ இருப்பதாக தன்னிடம் கூறியதாக பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதை தொடர்ந்து காரில் வந்த நபர் அவ்விடத்தில் இருந்து திடீரென மாயமாகி சென்றதை அடுத்து சந்தேகமடைந்த மாணவன் அவ்விடத்தில் உள்ளவர்களிடம் குறிப்பிட்டுள்ளார். மேலும் குறித்த இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினர் கடற்படையினர் இணைந்து சுற்றிவளைப்பு சோதனைகளை தற்போது மேற்கொண்டுள்ளனர். மேலும் குறித்த காரில் வந்து விசாரித்த நபர் தொடர்பிலான சிசிரிவி காணொளியை பெற்றுள்ள பாதுகாப்பு தரப்பினர் சந்தேக நபரை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.