இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்; ஜெய்ஷ் இ முகமது மிரட்டல்!!

இந்தியாவில் முதலமைச்சர்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தவுள்ளதாக ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் மீது குறி வைத்து தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 44 பாதுகாப்புப் படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்று ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை தடை செய்ய வேண்டும் எனவும், அதன் தலைவர் மசூத் அசாரை ஒப்படைக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பான ஆதாரங்களை இந்தியா வழங்கியுள்ள போதிலும், அதனை பாகிஸ்தான் மறுத்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் முதலமைச்சர்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தவுள்ளதாக ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. டெல்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தாக்குதல் நடத்தவுள்ளதாகவும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச மாநில போலீஸ் டிஜிபி ஆகியோர் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மே 6-ம் தேதி முதல் 13-ம் தேதிக்குள் இந்த தாக்குதல் நடத்தப்படும் என ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளதையடுத்து, இரண்டு முதல்வர்கள் இல்லங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதும் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, அண்டை நாடான இலங்கையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் கொத்து கொத்தாக மக்கள் செத்து மடிந்தனர். உளவுத்துறையின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதே இந்த தாக்குதலுக்கு காரணம் என கூறி தாக்குதலுக்கு அந்நாட்டு அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்த நிலையில், இந்தியாவுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளது பீதியை கிளப்பியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo  #JAISH E MOHAMMAD  #TERROR ATTACK  #TERRORISTS
Powered by Blogger.