யாழ் மேல்நீதிமன்ற நீதிபதியின் வீட்டுக்குள் புகுந்த வாகனத்தால் பதற்றம்!


யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தின் முன் வாயில் இன்று (23) காலை வாகனம் ஒன்று மோதியதால் சிறிது நேரம் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் இது சாதாரண விபத்து என தெரியவந்ததை அடுத்து பதற்ற நிலை தணிந்துள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் கடமைக்கு செல்லும் நேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், கச்சேரி – நல்லூா் வீதியில் அமைந்துள்ள மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக இன்று காலை 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. வேகமாக வந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மேல் நீதிமன்ற நீதிபதியின் இல்ல வாயில் கதவுடன் மோதியது. நீதிபதி இல்ல வாயில், அருகிலுள்ள வீட்டு சுவா் ஆகியவை இதனால் உடைந்து சேதமாயின. அப்பகுதியில் உள்ள மின்கம்பம் ஒன்றும் முறிந்தது.இதேவேளை, சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதிக்கு விரைந்த பொலிஸாா் வாகனத்தை தீவிர சோதனை செய்தனா்.  வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளாா்.
Powered by Blogger.