கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு ஆளுநர் சுரேன் ராகவன் சந்திப்பில் என்ன நடந்தது!!

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்  இன்று (11) காலை விஜயம் செய்தார்.
கீரிமலை நகுலேஸ்வரத்தினை புனித பூமியாக பிரகடனப்படுத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் ஆய்வு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த விஜயத்தின்போது கோயில் நிர்வாகத்தினர் மற்றும் அரச அதிகாரிகளுடனும் ஆளுநர் அவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்த கலந்துரையாடலின் பின்னர் ஆளுநர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

கீரிமலை புனித ஸ்தலம் இலங்கையின் வரலாற்றில் பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்களில் ஒன்றாகும். ஆலயத்திலுள்ள பிரச்சனைகள் தொடர்பில் அரசாங்கத்தினால் செய்யக்கூடிய விடயங்கள் என்ன என்பது தொடர்பாக ஆலய பிரதம குருக்கள் கேட்டுக்கொண்டதற்கமைவாக எனது இந்த விஜயம் அமைந்துள்ளது. ஆலய நிர்வாகத்தினருடனான எனது முதற் சந்திப்பு இதுவாகும்.

மேலும் , ஆலய நிர்வாகத்திடம் அவர்களுடைய பிரச்சனைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டதுடன் அவற்றை ஆவணப்படுத்தி தருமாறு கேட்டுள்ளேன்.

அவற்றில் அநேக பிரச்சனைகள் உள்ள காரணிகளாக நீர் ,மீள்குடியேற்றம், இடம்மாசடைதல் போன்றன காணப்படுகின்றன.

எனவே இவை தொடர்பில் ஆலய நிர்வாகம் , மக்கள் மற்றும் இராணுவத்தினருடன் கலந்தாலோசித்து மீண்டும் ஓர் சந்திப்பினை ஏற்படுத்தி இவற்றை எவ்வாறு படிப்படியாக முன்னேற்றலாம் என்று யோசிப்பதாக ஆளுநர் அவர்கள் குறிப்பிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.