கோட்டாபாய உத்தரவில் போராளிகள் மீது மிலேச்சத்தனமான துன்புறுத்தல்!!

இலங்கையில் தமிழீழ விடுலை புலிகளின் போராளிகள் மற்றும் சந்தேக நபா்களான பொதுமக்களுக்கு துன்புறுத்தல் செய்வதற்கான உத்தரவுகளை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளா் கோட்டாபாய ராஜபக்ஸ வழங்கினாா்.மேற்கண்டவாறு உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் பணிப்பாளா் யஸ்மின் சூக்கா குற்றஞ்சாட்டியுள்ளாா். நேற்றையதினம் லண்டனில் நடைபெற்ற கோத்தாபயவுக்கு எதிராக வழக்கு செய்தமையை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு

கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கோத்தாபபய மீது தற்போது நாம் வழக்கு தொடர்வதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாக காணப்படுகின்றது எனவும் சித்திரவதை செய்வதற்கான உத்தரவு மற்றும் கட்டளைகள் அனைத்தும் அவரினால்

வழங்கப்பட்டுள்ளதுடன் அவர் இந்த செயற்பாடுகளுக்கு சட்டபூர்வமாக பொறுப்புடையவர் எனவும் தெரிவித்துள்ளர்.பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டை மையமாகக் கொண்டிருந்ததாக பல ஆண்டுகளாக கோத்தாபய தனது பகிரங்க அறிக்கைகளில் தெளிவுபடுத்தியுள்ளார்.

எனவே தற்போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ அமெரிக்காவில் இருக்கும் தருணத்தில் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு சிறந்த வாய்ப்பு கிட்டியுள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் வழக்கினை தாக்கல் செய்த ரோய் சமாதானம் மற்றும் பிரபல சட்டத்தரணி ஸ்கொட் கிள்மரே ஆகியோரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.