தற்கொலைதாரி தாயாருக்கு எழுதிய கடிதம் சிக்கியது!


இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய தற்கொலைக் குண்டுதாரியொருவர் தன் தாயாருக்கு எழுதிய கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபரின் தெமட்டகொட மகாவில கார்டனில் உள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இந்த கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் தனது மதத்திற்காக இந்த தாக்குதல்களை மேற்கொள்வதாகவும், தன்னை மன்னித்து விடுமாறும் கூறியுள்ளார். இயேசுபிரானின் புனித நாளான உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டு தாக்குதலில் 310 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்து தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று இலங்கையில் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு குறிப்பிடதக்கது.

No comments

Powered by Blogger.