பிரித்தானியாவில் கைத்தொலைபேசி உபயோகிக்கும் வாகனச் சாரதிகளைக் கண்டறிய கண்காணிப்புக் கருவிகள் அறிமுகம்!!

பிரித்தானியாவில் கைத்தொலைபேசி உபயோகிக்கும் வாகனச் சாரதிகளைக் கண்டறிய கண்காணிப்புக் கருவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


வாகனம் செலுத்தும்போது கைத்தொலைபேசி உபயோகிக்கும் சாரதிகளைக் கண்டறிவதற்கான கண்காணிப்புக் கருவிகள் பொலிஸாரால் பயன்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வீதிகளில் பொருத்தப்படும் இக்கருவிகள் கார்களில் கைத்தொலைபேசி உபயோகிக்கப்படும்போது குறீயீடொன்றை ஒளிரச்செய்து வாகனச் சாரதிகளை  எச்சரிக்கை  செய்யும்  வகையில்  அமைக்கப்பட்டுள்ளன.

ஆனாலும் வாகனத்தின் சாரதியினாலா அல்லது பயணிப்பவராலா கைத்தொலைபேசி உபயோகிக்கப்படுகிறது என்பதை இக்கருவிகளால் பிரித்தறிய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

 கைத்தொலைபேசி உபயோகிக்கும் வாகன சாரதிகளால் ஏற்படும் விபத்துகளை கணிசமான அளவில் குறைப்பதற்கு இப்புதிய தொழில்நுட்ப வசதி உதவுமென பொலிஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.







கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.