இஸ்லாமிய பயங்கரவாதத்தை இலங்கை அரசால் ஒழிக்க முடியுமா?
சுற்றி வளைக்காமல் நேரடியாகச் சொல்வதென்றால், ‘முடியாது’ என்பதே பதில். காரணம் அவர்கள் குறித்த ஒரு நிலப்பரப்புக்குள் இல்லை. அங்கும் இங்குமாகச் சிதறி, மக்களோடு மக்களாகக் கலந்திருக்கிறார்கள். அவர்கள் தூணிலும் இருப்பார்கள் துரும்பிலும் இருப்பார்கள். அவர்களுக்கு என்று நிலையான ஒரு தாக்குதல் வடிவமும் கிடையாது.
இங்கு பிரான்சில் கடந்த 4 ஆண்டுகளில் நடந்த சம்பவங்களை உற்றுநோக்கினால் நமக்கு சில உண்மைகள் புரியும்.
ஜனவரி 7, 2015 இல் “சார்லி எப்தோ” பத்திரிகைமீது அவர்கள் தாக்குதல் நடத்தி 17 பேரைக் கொன்றார்கள். பிரெஞ்சு அரசு ஆடிப்போனது. பயங்கரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக சூளுரைத்தது. பல நடவடிக்கைகளையும் எடுத்தது. ஆனால் எண்ணி பத்தே மாதத்தில், அதாவது நவம்பர் 13, 2015 இல் உலகமே அதிரும்படியான ஒரு கோரத்தாக்குதலை தலைநகர் பரிசிலே இஸ்லாமிய பயங்கரவாதிகள் அரங்கேற்றினர். அதில் 140 பேர் கொல்லப்பட, 413 பேர் காயமடைந்தனர்.
பிரெஞ்சு அரசு முன்பைவிட தீவிர நடவடிக்கையில் இறங்கலாயிற்று. எங்குமே பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். இண்டபோல் தொடக்கம், மொஸாட், FBI மற்றும் பிரெஞ்சு புலனாய்வு அமைப்புக்களான DGSE, DGSI என அனைத்துமே கடும்நடவடிக்கையில் இறங்கின. பிரெஞ்சு அரசிடம் இல்லாத ஆயுதங்களா? ஆளணி வளமா? தொழில்நுட்ப வசதிகளா? தன்னிடம் இருக்கும் சகல சக்திகளையும் பயங்கரவாத ஒழிப்புக்கு பயன்படுத்திற்று பிரெஞ்சு அரசு.
ஆனாலும் பயங்கரவாதிகளை ஒழிக்க முடிந்ததா?
பரிசின் இரத்தம் காயும் முன்பே, 14 ஜூலை 2016 இல், அதுவும் பிரான்சின் விடுதலை நாள் அன்று, நீஸ் நகரிலே பென்னம்பெரிய வாகனம் ஒன்றை ஓட்டி வந்த பயங்கரவாதி ஒருவன், கடற்கரையில் சுதந்திரநாள் கொண்டாட்டத்தில் இருந்த மக்கள் மீது ஏற்றி 86 பேரை படுகொலை செய்து, 434 பேரை காயமடையச் செய்தான்.
இஸ்லாமிய பயங்கரவாதிகளை ஒழிப்போம் என சபதம் எடுத்த பிரெஞ்சு அரசு, செய்வது அறியாது திகைத்தது.
மேலே சொல்லப்பட்ட பாரிய சம்பவங்கள் மட்டுமல்லாது, ஆங்காங்கே கத்தியால் குத்துவது, சுத்தியலால் தாக்குவது, கழுத்தை அறுப்பது என்று பலவித தாக்குதல்களை தொடர்ச்சியாக பயங்கரவாதிகள் செய்துகொண்டே வருகிறார்கள்.
இப்போதுகூட பிரான்சில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று யாருமே உறுதிப்படுத்தவில்லை. அடுத்த தாக்குதல் எப்போது? எங்கே? என்கிற கேள்வி இருந்துகொண்டேதான் இருக்கிறது.
பிரெஞ்சு அரசினால் பிடுங்கமுடியாத ஆணியை இப்போது இலங்கை அரசு பிடுங்க, களத்தில் குதித்துள்ளது. ஆனால் அது அவ்வளவு இலகுவானது அல்ல. இஸ்லாமிய பயங்கரவாதிகளின் இலக்கு மக்களைக் கொல்வது. அவர்களுக்கு ஒரு பொதுமகனைக் கொன்றாலும் வெற்றிதான். அது என்னமோ காபீரோ கூபீரோ எனும் பெயரில் யாரை வேண்டுமானாலும் அவர்கள் கொல்வார்கள். ஆயுத தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டாலும் ஒரே ஒரு சிறு கத்தியைக் கொண்டு யாரையாவது கொல்லவேண்டும் என்கிற கொலைவெறியோடு யாரோ ஒரு பயங்கரவாதி, கொழும்பிலோ, புத்தளத்திலோ, அல்லது வடக்கிலோ திரியத்தான் போகிறான்.
‘பயங்கரவாதத்தை ஒழிப்பதிலே நாம்தான் விண்ணர்’ என்று மார்தட்டிய இலங்கை இராணுவத்துக்கு ஒரிஜினல் செக்மேட் இப்போதுதான் வந்து சேர்ந்துள்ளது.
ஒரு நாட்டிலே பத்துலட்சம் இஸ்லாமிய மக்கள் வாழ்ந்தால், அந்த பத்து லட்சத்தில் யார் யார் பயங்கரவாதிகள் என்பதை அறிவது இலகுவான காரியம் இல்லை. பயங்கரவாதிகளை வேட்டையாடுகிறோம் எனும்
பெயரில் அப்பாவி இஸ்லாமிய மக்கள் மீது நீங்கள் பாயமுடியாது. அவர்களை நீங்கள் துன்பப்படுத்த முடியாது.
ஏற்கனவே ‘புலிகளை ஒழிக்கிறோம்’ எனும்பெயரில் நீங்கள் ஒழித்துக்கட்டிய அப்பாவி தமிழ் மக்களின் எண்ணிக்கை உலகறிந்த ஒன்று.
ஆகவே, பிரெஞ்சு அரசால் முடியாததை, அமெரிக்க, பிரித்தானிய அரசுகளால் முடியாததை இலங்கை அரசு சாதிக்கும் என்கிற நம்பிக்கை இல்லை. ஒருவேளை ஏதேனும் ‘மெடிக்கல் மிராக்கிள்’ செய்து, இலங்கை இராணுவம் இஸ்லாமிய பயங்கரவாதிகளை ஒழிக்குமானால், அதற்கு முன்னர் இன்னொரு முள்ளிவாய்க்காலை இஸ்லாமிய மக்களுக்குப் பரிசாகத் தந்துவிட்டுத்தான் அந்த அற்புதத்தை நிகழ்த்த முடியும்.
இப்போதைக்கு அப்பாவி இஸ்லாமிய மக்களுக்காக இறைவனிடம் வேண்டுவதைத் தவிர நமக்கு வேறு தெரிவுகள் இல்லை.

.jpeg
)

கருத்துகள் இல்லை