இந்திய அளவில் கலக்கிய நடிகர் சூர்யா மகன்!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவரது மனைவி நடிகை ஜோதிகா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கின்றனர்.
பல்வேறு படங்களில் சூர்யாவும், ஜோதிகாவும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கின்றனர். அதேசமயம் அவர்களது குழந்தைகள் இன்னும் சினிமா பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. பள்ளிப் படிப்போடு விளையாட்டிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
தியாவிற்கு டென்னிஸ், கால்பந்து, கிரிக்கெட் விளையாட்டுகள் மீது ஈடுபாடு அதிகம். அதில் தனிக் கவனம் செலுத்தி பயிற்சி செய்து வருகிறார். மாநில அளவிலான ஜூனியர் கிரிக்கெட் போட்டிகளில் தியா பங்கேற்று கோப்பைகளை வென்றுள்ளார்.
அவற்றில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் கைகளால் பெற்ற கோப்பையும் அடங்கும். இந்நிலையில் சூர்யாவின் மகன் தேவ், கராத்தேவில் ஈடுபாடு கொண்டு காணப்படுகிறார்.
இவர் தேசிய அளவிலான ஷென் இஷ்ரின்யூ கராத்தே போட்டியில் கலந்து கொண்டார். தமிழகத்தில் இருந்து 40 பேர் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. அவற்றுள்ள தண்டர்கேக் பிரிவில் பங்கேற்றார்.
இந்தப் போட்டியைக் காண சூர்யா, ஜோதிகா, தியா ஆகியோர் சென்றிருந்தனர். இப்போட்டியில் தேவ் வெற்றி பெற்று சாதித்துள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை