பருத்தித்துறையில், தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு, இனம்தெரியாதவர்  தீவைத்தார்!!


பருத்தித்துறை பகுதியில் உள்ள தனியார் இலத்திரனியல் பொருட்கள் விற்பனை நிலையத்தில் இருந்த தொலைகாட்சி பெட்டிகளுக்கு மர்ம நபர் ஒருவர் தீ வைத்து அவற்றை கொளுத்தியுள்ளார்.

பருத்தித்துறை நகர் பகுதியில் உள்ள குறித்த விற்பனை நிலையத்திற்கு முன்பாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி பெட்டிகள் இரண்டுக்கு தீ வைத்து கொளுத்தியுள்ளார். நீளக்காற்சட்டையும் முழுக்கை சட்டையும் அணிந்த மர்ம நபர் ஒருவர் கையில் தீ பெட்டியுடன் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை 5.39 மணிக்கு வந்து தொலைக்காட்சி பெட்டிகளுக்கு தீ வைத்து அவற்றை கொளுத்தி விட்டு தப்பி சென்றுள்ளார். குறித்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை கொண்டு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.