வவுனியாவில் தமிழர் பிரதேசம் தனி சிங்கள மாவட்டமாக மாறும் நிலை!!

வடமாகாண எல்லை அல்லது வவுனியா மாவட்ட எல்லையில் மிக வேகமாக சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அறிக்கையோடு நிற்றும் தமிழ் அரசியல் தலமைகள் குறித்து வவுனியா வடக்கு மக்கள் கடுமையான விசனம் தொிவித்துள்ளனா்.


வவுனியா வடக்கில் இலங்கையின் இனச்சிக்கல் தீவிரமடைவதற்கு முன்பாகவே சிங்களக் குடியேற்றங்களும் சிங்களமயமாக்கல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. எனினும் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப் பகுதியில்,

மிகவும் தீவிரமாக சிங்களமயமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.பெரும்பான்மையின மக்கள் வவுனியா வடக்கில் திட்டமிட்டு குடியேற்றப்படுவதுடன் பாரம்பரிய தமிழ் கிராமங்களுக்கு சிங்களப் பெயர் சூட்டுகின்ற செயற்பாடுகளும் இடம்பெறுவதாக

அப் பகுதி மக்கள் கூறுகின்றனர். இதேவேளை குறித்த பகுதியில் குடியேறும் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து அரசு ஊக்கப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் பௌத்த சின்னங்களை நிறுவுதல், காடுகளை அழித்து குடியேற்றல்,

 தமிழ் மக்களின் பாரம்பரிய கிராமங்களுக்கு சிங்களப் பெயர் சூட்டல் என்று தொடர்ச்சியாக சிங்களமயமாக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.வவுனியா வடக்கை சிங்கள மயமாக்குவதன் மூலம்,

முல்லைத்தீவு வடக்கு கிழக்கு இணைவிடங்களை முழுமையாக அபகரிப்பதே நோக்கம் என்றும் இனவிகிதாரசாரத்தை மாற்றியமைக்கும் இத்தகைய குடியேற்றங்கள் தற்போதைய அரசின் காலத்திலும் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட் மக்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், அரசியல் தலைவர்கள் வெறுமனே அறிக்கையை மாத்திரம் வெளியிட்டு வருவதாகவும், தமது கிராமங்கள் சிங்களமயமாக்கப்படுவதை தடுக்கவில்லை என்றும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் எமது பிரதிநிதிகள் இத்தகைய குடியேற்ற திட்டங்களையாவது தடுத்த நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.