வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்ணீர் மல்க போராட்டம்!!


புதுவருட தினம் என்கிறார்களே?? எமது நிலையை கவணிப்பார் எவரும் இல்லையா?? தமது பிள்ளைகள் எங்கே..? என்று கோசமிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்ணீர் மல்க வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார்கள்.

வவுனியா, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக 785 ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் அவர்களது போராட்ட தளத்திற்கு முன்னால் இப் போராட்டம் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ், சிங்கள புத்தாண்டை தமிழ் அரசியல் வாதிகள், சிங்கள தலைவர்கள், அரசியல்வாதிகள் கொண்டாடி வருவதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் எமது பிள்ளைகள் எம்மிடம் வராமையால் நாம் வீதியோரத்தில் எமது பிள்ளைகளுக்காக கண்ணீருடன் ஏங்கிக் கொண்டிருக்கின்றோம். தமிழ் தலைமகள் எங்கே?? நாங்கள் உங்களுக்க பவலக்காய்யா??

தமிழ் அரசியல் தலைமைகள் எம்மை கைவிட்டு விட்டு எமக்காக என  வாக்குளைப் பெற்று தமது வயிறுகளையும் உல்லாசத்தினையும் நிரப்பியுள்ளனர். இனியும் வாக்கு என்று வந்தால் அவர்களுக்கு நாம் என்ன தெரிய வைப்போம். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்பன தலையிட்டே எமது பிள்ளைகளை மீட்டுத் தர முடியும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசம் எழுப்பினர்.
இப், போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தி தமது கண்டத்துடன் கவலைகளை தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.