யாழ்ப்பாணத்தில் பல்கலை மாணவர்களுடன் கலந்துரையாடிய சந்திரிக்கா !

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் தூதுவர் குழுவினருடன் யாழ்.பல்கலை மாணவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் பௌவுசி, சுவிட்ஸர்லாந்து மற்றும் நெதர்லாந்து நாடுகளின் தூதுவர்கள், பங்களாதேஷின் உயர்ஸ்தானிகர் ஆகியோரும் இன்று ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

இதன்போது தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்ததிற்குமான அலுவலகம், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் நோக்கில் இதுவரையிலும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திராத றுகுணு பல்கலைக்ககழத்தின் 50 மாணவர்களை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்ததுடன் யாழ். பல்கலைக்கழகத்தின் 50 மாணவர்களுடன் தமது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தினையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்த றுகுணு மற்றும் யாழ்.பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், சுவிட்ஸர்லாந்து, நெதர்லாந்து தூதுவர்கள், பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் உள்ளிட்டோருடன் தமது அனுவங்களை பகிர்ந்துகொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.