முல்லைத்தீவு மக்கள் தமிழ் பொலிஸார் இன்றி சிரமம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையங்கள் தவிர்ந்த ஏனைய பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழி தெரிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இல்லாமையால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.


குறிப்பாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துகொள்ளவும் வெளிப்படையாக அனைத்து விடயங்களையும் தெரிவிக்கவும் முடியாத நிலை காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் 33 தமிழ் பெண் பொலிஸார் பயிற்சி நிறைவுற்று வெளியேறியுள்ள நிலையிலும் இவ்வாறான குறித்த பொலிஸ் நிலையங்களில் நியமிக்கப்படவில்லை.

குறித்த பயிற்சி நிறைவு செய்தவர்களில் சில பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் நிலையங்களில் கடமைகளை பொறுப்பேற்றுள்ள போதிலும், அவர்களிற்கு தமிழ் மொழி தெரியவில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

பெண்களின் பிரச்சினைகளை கையாளக்கூடிய வகையில் நீண்டகாலமாக காணப்படும் குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்கு அப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராஜாவிடம் பலமுறை கூறியும் அதற்கான எந்தவொரு முயற்சியும் அவர் மேற்கொள்ளவில்லையென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

தமிழ் பேசும் பெண் பொலிஸார் இல்லாத நிலையில் தமிழ் மொழி தெரிந்த ஆண் பொலிஸாரே முறைப்பாடுகளை பதிவு செய்து வருகின்றனர். இதனால் பெண்கள் தமது பிரச்சினைகளை வெளிப்படையாக கூறுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இந்த நிலையில், குறித்த பிரச்சினையை உடன் நிவர்த்தி செய்யும் வகையில், தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை விரைந்து நியமிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.