அமெரிக்காவில் தொடர்ந்தும் காற்றுடன் வெள்ளம்!!
அமெரிக்காவின் தென் மாநிலங்களில் தொடர்ச்சியாக வீசிவரும் வேகமான காற்று மற்றும் அடைமழையால், இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலர் காயமடைந்துள்ளதோடு, சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
மிசிசிப்பி, டெக்ஸாஸ் மற்றும் லூசியானா ஆகிய பகுதிகளிலேயே உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக டெக்ஸாஸில் பெற்றோருடன் காரில் பயணித்த குழந்தைகள் இருவர், மரம் முறிந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளனர். காரிலிருந்த பெற்றோர் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர்.
வெள்ளத்தால் சேறும் சகதியுமாக பல இடங்கள் காணப்படும் நிலையில், மீட்புப் பணிகளை சீராக தொடரமுடியவில்லையனெ அமெரிக்க ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புயல் தற்போது கிழக்கு கடற்கரையோர பகுதியை நோக்கி நகர்ந்துள்ளது. அதற்கு முன்னதாக மூன்று மாநிலங்களில் 11 புயல்தாக்கங்கள் பதிவாகியுள்ளன.
காற்றும் மழையும் தொடர்கின்ற நிலையில், நேற்று ஒஹியோ, தெற்கு கரோலினா மற்றும் விர்ஜினியா ஆகிய பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பல இடங்களில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை