அமெரிக்க சபாநாயகர் அயர்லாந்துக்கான ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார் !

எதிர்கால பிரெக்ஸிற் திட்டங்கள் அயர்லாந்தின் சமாதானத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் அமைந்தால் பிரித்தானியாவுடன் எந்தவொரு வர்த்தக ஒப்பந்தத்தையும் அமெரிக்கா முன்னெடுக்காது என டப்ளின் விஜயம் செய்துள்ளஅமெரிக்க சபாநாயகர் நான்ஸி பெலோசி உறுதியளித்துள்ளார்.


ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறியதால் பின்னரும் அயர்லாந்துக்கும் வட அயர்லாந்துக்கும் இடையே தடையற்ற எல்லையொன்றைப் பேணுவது மிகமுக்கியமென பெலோசி வலியுறுத்தியுள்ளார். இந்தவார ஆரம்பத்தில் லண்டன் வருகை தந்திருந்த வேளையிலும் இதே கருத்தை பெலோசி வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமது ஐரோப்பிய விஜயத்தின் ஒருபகுதியாக அயர்லாந்து விஜயம் செய்துள்ள பெலோசி ஐரிஷ் பாராளுமன்றத்தில் வழங்கிய உரையில் கூறியதாவது;

‘பெரிய வெள்ளி உடன்படிக்கையை குறைத்து மதிப்பிடக்கூடிய எதுவும் பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகளில் இடம்பெறாது என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

பிரெக்ஸிற்றின் பின்னரும் அயர்லாந்துக்கும் வாடா அயர்லாந்துக்கும் இடையில் கடுமையான எல்லை திரும்புவதை தடுப்பதும் இதில் உள்ளடங்கும்.

பிரெக்ஸிற் ஒப்பந்தம் பெரிய வெள்ளி உடன்படிக்கையை குறைமதிப்பிற்கு உண்டாக்கினால் அதன்பின் அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கு இடையில் எந்தவொரு வர்த்தக உடன்படிக்கைக்கும் வாய்ப்பில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

பிரெக்ஸிற் தொடர்பான சவால்களை அயர்லாந்து எதிர்கொள்ளும்போது அமெரிக்க அரசாங்கம் அவர்களுடன் ஆதரவாக நிற்பார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறேன்’ என பெலோசி தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.