தமிழக தேர்தல் களநிலவரங்கள்!!

தமிழகத்தில் 37 தொகுதிகளில் நடைபெற்ற மக்களவை தொகுதிகளில் 69.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக நாமக்கலில் 78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 57.05 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த மக்களவைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நிறைவடைந்தன. மதுரையில் மட்டும் 8 மணிவரை வாக்குகள் பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.5 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் 67.08 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் உள்ள கட்டவிளாகம், கீழ்குடி, கள்ளவழியேந்தல், ருத்திரன்பட்டி, இழுப்பைகுடி உள்ளிட்ட 5 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1300 வாக்காளர்கள், கடந்த ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
thiruvaadanai
இதனால் இங்குள்ள 2 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் யாரும் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. வாக்குச்சாவடி அலுவலர்களும், போலீஸார் மட்டுமே உள்ளனர். கோரிக்கையை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கிறோம். தேர்தல் புறக்கணிப்பைக் கைவிடுங்கள் என கிராம மக்களிடம் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதை ஏற்க கிராம மக்கள் மறுத்துவிட்டனர். இதனால் அங்கு தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் தொடர்கிறது. 
திருவாடனை
--இரா.மோகன்
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அழகிய மண்டபம் பிலாங்காலை பகுதியில் உள்ள 157-வது வாக்குச்சாவடியில் கல்லுவிளைப் பகுதியைச் சேர்ந்த அஜின் என்பவர் வாக்களிக்க வந்தபோது அவரது ஓட்டு பதிவானதாக தேர்தல் அதிகாரி கூறியதால் அதிர்ச்சியடைந்த அஜின் வாக்களிக்க முடியாமல் தேர்தல் அதிகாரியிடம் புகார் கூறினார்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்களிக்க வந்த 60 வயது முதியவர் முருகேசன் என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஆரணி தொகுதியில் 36. 51 சதவிகிக வாக்குகள் பதிவாகிவுள்ளன. மத்திய சென்னையில் 22.89 சதவிகித வாக்குகள் பதிவாகிவுள்ளன. 
தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த், அவரின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். 
தமிழகத்தில் தற்போது விறுவிறுப்பாக தேர்தல் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 
திண்டுக்கல்
நீலகிரி தனித் தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், முதியோர் பலர் வாக்களிப்பது எப்படி என்பது தெரியாமல் தவித்தனர். அவர்களுக்கு வாக்குப்பதிவு மைய அலுவலர்கள்  உதவினர். 
நீலகிரி

பொன். ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பா.ம.க-வின் அன்புமணி ராமதாஸ் தன் மனைவியுடன் வந்து வாக்களித்தார். மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் தனது வாக்குசாவடியில் வாக்களித்தார். 
அன்புமணி
ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் உள்ள வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு முறையான வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்களை வாக்குப் பதிவு மையத்துக்கு அழைத்துச் செல்ல சக்கர நாற்காலி உள்ளிட்ட எந்த வசதியும் அங்கு இல்லாததால் மாற்றுத்திறனாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 13.48% வாக்குகள் பதிவானதாக தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழகத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். 
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் வரிசையில் நின்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.
தினகரன்
அதேபோன்று சென்னை அடையாறில் டி.டி.வி தினகரனும் தனது வாக்கைப் பதிவு செய்தார். தமிழக அமைச்சர்களும் தங்களின் தொகுதிகளில் வாக்களித்து வருகின்றனர். 
சூர்யா, ஜோதிகா, கார்த்தி
சென்னையில்  சூர்யா, ஜோதிகா, கார்த்தி, சிவகுமார் ஆகியோர் வாக்களித்தனர். அதேபோன்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் வந்து வாக்களித்தார்.   
கமல்
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி மற்றும் ஆளுநர் கிரண்பேடி ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். 
வாக்குப்பதிவு
தமிழகம் முழுவதும் பல இடங்களில் வாக்கு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளதாகப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. கோவை வெள்ளலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறு காரணமாக இன்னும் வாக்குப்பதிவு தொடங்கவில்லை. அதேபோன்று  இடைத்தேர்தல் நடைபெறும் பூந்தமல்லி தொகுதி தண்ணீர் குளம் கிராமத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. 
வாக்குப்பதிவு
புதுச்சேரி: வீராம்பட்டினம் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் அரசு துவக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் மின்னணு இயந்திரம் பழுதால், ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு தாமதம். தேனி மாவட்டம்  ஆண்டிபட்டி நாச்சியார்புரம் வார்டு பூத் எண் 6 -ல் உள்ள வாக்குப் பதிவு இயந்திரம் பழுதாகியுள்ளது. இதன் காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி, கட்டையன்விளை வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு 15 நிமிடம் தாமதமாக தொடங்கியது.

துணை முதல்வர் ஓ.பி.எஸ், அவரின் மகன் ரவீந்திரநாத் குமார் உட்பட குடும்பத்தினர் அனைவரும் வாக்களிக்க இருக்கும் பெரியகுளம் செவன்த்டே பள்ளி வாக்குச்சாவடியில் அரைமணி நேரம் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது. தற்போது சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு நடந்துவருகிறது.
மதுரை நாடாளுமன்ற தொகுதி சி.பி.எம்.வேட்பாளர்  சு.வெங்கடேசன் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
சு. வெங்கடேசன்
நடிகர்கள்
தமிழகத்தில் காலை முதலே பல்வேறு பிரபலங்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றது. தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு,  நடிகர்கள் ஸ்ரீகாந்த், ரோபோ ஷங்கர், விஜய் ஆண்டனி ஆகியோர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். 
தமிழிசை - குஷ்பூ
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி சிலுவம்பாளையம் அ.ஊ.ஒ.து.பள்ளி வாக்குசாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார். 
வாக்குசாவடிகளில் காலைமுதலே வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். முதியோர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
முதியோர்கள்
தமிழகத்தில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் ஒட்டன்சத்திரத்தில் உள்ள கஸ்தூரி ரெட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி எண் 187 வாக்களிக்க வந்த நிலையில், வாக்கு இயந்திரம் பழுதானது. 100-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கக் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 
இதுபோன்று இன்னும் சில இடங்களிலும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. சில இடங்களில் இயந்திரங்கள் மாற்றப்பட்டு வாக்குப்பதிவுத் தொடங்கியது. 
அஜித்
நடிகர்கள் அஜித், ரஜினி, நடிகை ஷாலினி ஆகியோர் காலையில் தங்களது வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியிலும், அஜித் மற்றும் ஷாலினி திருவான்மியூரிலும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். 
வாக்குப்பதிவு
தமிழத்தில் ஜனநாயக திருவிழா உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழகம் கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட வேலூர் தொகுதி தவிர்த்து 38 தொகுதிகளிலும் 18 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்றுகாலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் காலை முதலே உற்சாகத்துடன் வாக்குப்பதிவு மையங்களுக்கு வந்து வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். 
வாக்கு
தமிழ்நாடு (38), தவிர்த்து கர்நாடகா (14), மகாராஷ்டிரா (10), உத்தரப்பிரதேசம் (8), அஸ்ஸாம் (5), பீகார் (5), ஒடிஷா (5), சட்டீஸ்கர் (3), மேற்கு வங்கம் (3), ஜம்மு காஷ்மீர் (2), மணிப்பூர்(1) ஆகிய மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் (1) இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நாடுமுழுவதும் 95 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுவதால் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. 
 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


Powered by Blogger.