பந்தை தானே வைத்துக்கொண்டு வீரர்களுடன் தேடிய நடுவர் !!

ராயல் சேலஞ்சர் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையேயான ஆட்டத்தின்போது பந்தை அம்பயர் தனது பாக்கெட்டில் வைத்துக்கொண்டு தேடிய நிகழ்வு பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, பெங்களூர் அணியின் இன்னிங்ஸை கோலியும், பார்த்திவ் படேலும், கோலியும் தொடங்கினர். தொடக்கமே அதிரடி காட்டிய இந்த இணை பந்துகளை நாலாபுறமும் சிதறவிட்டது. 3 ஓவருக்கு 35 ரன்களைச் சேர்ந்த இணையை, ஷமி பிரித்தார். அதன்படி கோலி 13 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார். எபி டிவில்லியர்ஸ் களத்துக்கு வந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்த பார்த்திவ் படேலை முருகன் அஸ்வின் அவுட்டடாக்கினார். 24 பந்துகளில் 43 ரன்களுடன் நடையைக்கட்டினார் பார்த்திவ்.

அடுத்தாக வந்த மொயின் அலியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. தொடர்ந்து அக்ஷிப் நாத்தும் நடையைக் கட்ட, 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களைச் சேர்ந்தது பெங்களூர். ஏபிடி வில்லியர்ஸூம், ஸ்டோனிஸூம் இணைந்து, பஞ்சாப் பெளலர்களின் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினர். கடைசி ஓவர்களில் இந்த ஜோடி அதிரடி காட்டவே, பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. டிவிலியர்ஸ் 44 பந்துகளில் 82 ரன்களும் ஸ்டோயினிக்ஸ் 34 பந்துகளில் 46 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த விறுவிறுப்பான ஆட்டத்தின் இடையே சுவராஸ்யமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. திடீரென பந்தைக் காணவில்லை என்று கூறி அனைவரும் ஒரு சில நிமிடங்கள் தேடிக்கொண்டிருந்தனர். பின்னர் புதிதாக பந்து கொண்டுவரப்பட்டது. இதற்கு அம்பயர்தான் காரணம் என்பது பின்பு கண்டறியப்பட்டது. உண்மையில், 14 ஓவரை வீசிய முருகன் அஷ்வின், ஓவர் முடிந்ததும் பந்தை அம்பயர் ஆக்ஸன்ஃபோர்டிடம் கொடுத்துவிட்டுச்சென்றார். அவர், அதை மற்றொரு அம்பயரான சம்சுதினிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். இதையடுத்து, அடுத்த ஓவரை அங்கித் ராஜ்புத் பந்துவீச வந்தார். அப்போது, பந்து எங்கே என அம்பயரிடம் கேட்க, அவர் பந்தை பாக்கெட்டில் வைத்ததை மறந்துவிட்டு, பந்தைக் காணவில்லை என்று வீரர்களுடன் சேர்ந்து தேடிக்கொண்டிருந்தார். இது அங்கிருந்தவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால், மைதானத்துக்கு வெளியில் இருந்து மாற்றாக பந்துகள் எடுத்துவரப்பட்டது. அப்போதுதான், தனது பாக்கெட்டில் பந்து இருந்ததை சம்சுதின் உணர்ந்தார். இதையடுத்து, சிறிய தாமதத்துக்குப் பின்னர் போட்டி மீண்டும் தொடங்கியது. இந்த சம்பவம் களத்தில் இருந்தவர்கள் மட்டுமல்லாது, வர்ணனையாளர்கள் இடையேயும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.