புலனாய்வுப் பிரிவு படையணியை புதிதாக்கத் தீர்மானம்!!
புதிய புலனாய்வுப் பிரிவு படையணி ஒன்றை உருவாக்குவதற்கு இராணுவத்தினரால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை வெற்றி கொள்ளவும், தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இந்த பிரிவு உருவாக்கப்பட உள்ளது.
அதி நவீன தொழில்நுட்ப கருவிகள் தொழில்நுட்பங்கள் போன்றவற்றை பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த புலனாய்வு படையணி உருவாக்கப்பட உள்ளது.
மேஜர் ஜெனரல் லயனல் பலகல்ல வழகாட்டல்களின் அடிப்படையில் இராணுவ புலனாய்வு பிரிவு கடந்த 1989ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியின் கோரிக்கைக்கு அமைய படை சேனாதிபதியான முன்னாள் ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாச இந்த புலனாய்வு படையணியை உருவாக்கியிருந்தார்.
2009ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த போது மூன்று புலனாய்வு படையணிகள் காணப்பட்ட நிலையில், 2015ஆம் ஆண்டில் படையணிகளின் எண்ணிக்கை ஏழாக உயர்வடைந்திருந்ததாக தெரியவருகிறது.
இதன்படி, புதிய புலனாய்வு படையணி எட்டாவது படையணியாக உருவாக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை