தற்கொலை தாக்குதலில் தீவிரவாதியை தேவாலயத்திற்குள் அனுமதியாமல் தடுத்தி நிறுத்திய ரமேஷ்!!


தனது தோளில் கணத்த பையுடன் மட்டக்களப்பு தேவாலயத்திற்கு புதுமுகமாக வருகைத்தந்த தற்கொலை குண்டுதாரியை விசாரித்து, "உயிர்த்தெழுந்த ஞாயிறு ஆராதனையை படம் பிடிக்க வந்தேன்." என்று அவர் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்து, அவரை தேவாலயத்திற்குள் அனுமதியாமல் பலவந்தமாக வெளியே தடுத்து நிறுத்தினார். ரமேஷ் தேவாலயத்தின் வாசலில் பலவந்தமாக தீவிரவாத குண்டுதாரியை தடுத்து நிறுத்தியவுடன் குண்டு வெடிக்கப்பட்டது. தேவாலயத்திற்குள் குண்டுதாரி நுழைந்திருப்பாரெனில் இழப்புகள் இன்னும் அதிகமாக இருந்திருக்கும். அனேகருடைய உயிரைக் காப்பாற்றிய ரமேஷ் மரணமடைந்தார். ஆனால் அவருடைய செயல் உண்டாகவிருந்த பெரும் நாசத்தை தவிர்ப்பற்கு உதவியாயிருந்தது. ரமேஷ் தன்னுடைய மனைவி மற்றும் இரு குழந்தைகளையும் மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு இறையடி சேர்ந்தார்

No comments

Powered by Blogger.