மறைந்த ஜே.கே.ரித்தீஷ் உடல் இன்று மாலை அடக்கம்!!

.
மறைந்த ஜே.கே.ரித்தீஷ் உடல் இன்று மாலை அவரது சொந்த ஊரில் அடக்கம்  செய்யப்பட்டது.

சின்னபுள்ள படத்தில் நடிகராக அறிமுகமானவர் ஜே.கே.ரித்திஷ்.திமுக முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலின் பேரனான இவர் கடந்த  2009ம் ஆண்டு ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி.ஆனார். அதையடுத்து 2016ஆம் ஆண்டில் அதிமுகவில் இணைந்தார்.
மேலும் திரையுலகில்  சில படங்களில் நாயகனாக நடித்துள்ளார். நடிகர் ஆர்ஜே பாலாஜியுடன் இவர் நடித்திருந்த 'எல்கேஜி' படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
ராமநாதபுரத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக, ஜே.கே.ரித்திஷ் நேற்று ஆதரித்து வாக்கு திரட்டினார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்த அவரை, உறவினர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்ததாகக் கூறப்படுகிறது.
அதையடுத்து அவரது உடலை வீட்டுக்கு கொண்டு வந்த பின் சிலர் இதய துடிப்பு இருப்பதாக கூறியதை தொடர்ந்து மற்றொரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கும் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

மரணம் அடைந்த ரித்தீசுக்கு ஜோதீஸ்வரி என்ற மனைவியும், ஹிருத்திக் ரோ‌ஷன், ஹாரிக் ரோ‌ஷன் என்ற மகன்களும், தானவி என்ற 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர். ரித்தீஷ் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். தேர்தல் பிரசாரத்திற்கு வந்த அவர், இறந்து விட்ட நிலையில் குடும்பத்தினர் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்றனர்.

இந்நிலையில் மரணம் அடைந்த ரித்தீஷ் உடல், ராமநாதபுரத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அ.தி.மு.க. மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை 5 மணிக்கு அவரின் உடல் சொந்த ஊரான மணக்குடியில் அடக்கம் செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.