அவதானம் !! இது உண்மை!!

எழுபது வருடங்களுக்கு மேலாக சிறீலங்காப் படைகளின் அடக்குமுறைக்கும் இனப்படுகொலைக்கும் தமிழினம் உள்ளாக்கப்பட்டு சர்வதேச நீதி கோரி தமிழ் மக்கள் போராடி வருகின்ற ,
அண்மையில் சிறீலங்காவில் ஏற்பட்ட குண்டுவெடிப்புகளை அடுத்து முன்னாள் பேராளிகளை தமது ஒட்டுக்குழுக்களாக மாற்ற சிறீலங்கா படைத்தரப்பு திட்டமிட்டுள்ள நிலையில்,  அந்த வலையில் அரச ஒட்டுக்குழுவான தமிழரசுக் கட்சியோடு சேர்ந்து கொண்டு ஜனநாயக போராளிகள் கட்சி ஒன்றை நடத்திவருகின்ற துளசி எனப்படுபவரும்  வீழ்ந்துள்ள நிலையில்,  அவரை சர்வதேச ஊடகமொன்று செவ்வி கண்ட போது மேலும் சில தகவல்களை தெரிவித்துள்ளார்.

முப்பது வருடமாக விடுதலைப்போராட்டமல்ல உள்நாட்டு யுத்தமே இலங்கையில் நடந்தது எனவும் அதில் கவனம் செலுத்திய சிறீலங்கா படைகள் வெளிநாட்டுப் பயங்கரவாதத்தை இனங்காணத் தவறிவிட்டது எனவும் சிறீலங்கா படைகள் கோரினால் தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வு இரகசியங்களை காட்டிக்கொடுக்க தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

 காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும் நிலமீட்புக்காகவும் மக்கள் ஐநா சபையில்  போராடி வர, அந்தப் போராட்டங்களில் எந்திவிதத்திலும் ஈடுபடமால் முள்ளாள் போராளி என்ற ஒரு அடையாளத்தை பயன்படுத்தி அரச அனுசரணையுடன் கட்சி தொடங்கியதுடன் தொடர்ந்தும் அரசு சார்பாகவே கருத்து வெளியிட்டு வரும் துளசி தற்பொழுது ஒட்டுமொத்த முன்னாள் போராளிகளின் பிரதிநிதி , தானே, என்ற பாணியில் கருத்துகளை வழங்குவது தொடர்பாக முன்னாள் போராளிகள் மிக அவதானத்துடனும்  விழிப்புணர்வுடனும் இருக்கவேண்டுமென சமுக ஆர்வலர்கள் வேண்டுகோள்  விடுத்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo
Powered by Blogger.