பல்கலை மாணவர் கைதும் இனவாத அரசியலின் நகலும்!!
தமிழின அழிப்பு நடந்து பத்து ஆண்டுகள் கடந்திருக்கிறது, இக்காலகட்டத்தில், தமிழர்களாகிய நாம், போருக்குள் வாழவில்லையே தவிர, போர்க்காலத்தைக் காட்டிலும் படுமோசமான ஒரு
வாழ்வியல் சிக்கலுக்குள் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது மறுக்கமுடியாத உண்மை.
போதைப்பாவனை,
வாள்வெட்டு பயம், தற்கொலை, மனஅழுத்தம், குழுமோதல்,
கலாசார சீரழிவு, கல்வி நிலை வீழ்ச்சி என திட்டமிட்டு பலதரப்பட்ட
பிரச்சினைகளுக்குள் சிக்குண்டு கிடக்கிறது தமிழினம்.
எம் உரிமைக்கான
குரல் எமது நாட்டில் முடங்கிப்போக,
எமது அரசியல் தலைவர்கள் வசதிவாய்ப்புகளிற்கு
விலைபோனதும் தேசப்பற்று காவு
கொள்ளப்பட்டு, பேரினவாத
சக்திக்கு, கூஜா தூக்கியது
அனைவரும் அறிந்ததே. எமக்கான குரல்,
எமது சொந்த மண்ணில் மௌனமாய் இருக்க,
புலம்பெயர் மண்ணில்,
வெயிலிலும் மழையிலும்,
உடல் வருத்தி உன்னதமான
முறையில் ஒப்புவிக்கப்பட்டது. சர்வதேச அரசியல் நகர்வுகளுக்கமைய
புலம்பெயர் உறவுகளின் பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது, எனினும் அதற்கான முழுமையான தீர்வற்று எமது பிரச்சினை பேசப்பட்டுக் கொண்டிருக்க, அதற்கான கால அவகாசமாய் பத்து ஆண்டுகள்
கடந்துவிட்டது.
இந்த இடைவெளி
தமிழ் மக்களுக்கு பல ஆர்ப்பாட்டங்களையும், பல போராட்டங்களையும் திணித்துள்ளது. எமது சொந்த நிலத்திற்காய் நாம்
போராடினோம். எமது உறவுகளின் விடுதலைக்காய்
போராடினோம், காணாமல் போனவர்களின் முகவரிக்காய் குரல்
கொடுத்தோம், அது அப்படியே இருக்க,
தற்போது, இஸ்லாமிய பயங்கரவாதிகளாலும் தமிழ் மக்களாகிய நாங்களே வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம். தமிழனாய்
வாழ நாங்கள் படுகின்ற அவலங்கள் வார்த்தையில் வடிக்கமுடியாதவை, மனித உயிர்களை
அழிப்பது, சிங்களப் பேரினவாத அரசியல்
தலைவர்களுக்கு ஒன்றும்
புதிதான செயலோ பழக்கமற்ற செயலோ அல்ல என்பது நந்திக்கடலின் குருதித்துளிகளுக்குள்
நாம் கண்டுகொண்டதே. இந்த நூற்றாண்டின்
மிகமோசமான இனப்படுகொலையை நடாத்தி அதன் முழுப்பொறுப்பாளிகளாய் இருப்பவர்கள் சிங்களப்
பேரினவாத அரசியல் தலைவர்கள்.
அன்றாடம் வரும்
செய்திகள்,
இவ்விடயம்
சார்ந்த பல உண்மைகளை எமக்கு கோடிட்டாலும் அவற்றின்
யதார்த்தம், தமிழின
அழிப்பாகவே இருக்கிறதேயன்றி வேறில்லை. இஸ்லாமியப் பயங்கரவாதிகளை வளர்த்து அவர்களின்
தலையெடுப்பிற்கு அன்று தொட்டு இன்று வரை
சிங்களப் பேரினவாத அரசியல்வாதிகளும் ஒரு சில முஸ்லீம் அரசியல்வாதிகளுமே துணைபோயிருக்கின்றனர். அவர்களால் நிச்சயம் சிங்கள முஸ்லீம் மக்களைப்
படுகொலை
செய்துவிடமுடியாது, அதன் விளைவுகளை
அவர்கள் அறிந்தே உள்ளனர்.
தமிழ் மக்களின்
ஒட்டுமொத்த நிம்மதியைச் சிதைத்து, அவர்களின் வாழ்வை, இருப்பை கேள்விக்குறியாக்கும் முயற்சியின் ஆரம்பமாகவே யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. யாழ் பல்கலைக்கழகம் என்பது விடுதலை வரலாற்றில்
ஒரு முக்கியமான துணைச்சக்தியாய் மைல் கல்லாய் இருந்து வந்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை.
இன்று வரை பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்பு, மக்களின்
போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் உறுதுணையாகவே தொடர்கின்றது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண
சூழலை மையமாகக்கொண்டு தீவிரவாத முறியடிப்பு நடவடிக்கையின் ஒரு கட்டமாக யாழ். பல்கலைக்கழக வளாகம்
இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல்
நடாத்தப்பட்டது. இராணுவம், மற்றும் இராணுவப் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு வலயத்தினுள்
இருந்த இப்பல்கலை வளாகத்தினுள் இராணுவத்தை உள்நுழைப்பதற்கு இஸ்லாமிய தீவிரவாதத் தாக்குதல்
வழிவகுத்துள்ளது. திட்டமிடப்பட்ட தமிழினத்தின் அழிப்பிற்குரிய சாணக்கிய அரசியல் சூட்சுமமாகவே இதனையும் நோக்கவேண்டியுள்ளது.
தமிழர் தரப்பின்
பலத்தினை ஒவ்வொன்றாக சாய்த்துவிட்டவர்கள், தற்போது
பல்கலைக்கழகத்திற்குள்ளும் புகுந்துள்ளமை வருத்தமான விடயமே. நாம்
நிர்க்கதியாக்கப்பட்டு, பேசும் சக்தியற்றவர்களாய் ஆக்கப்படுகிறோம்.
இந்த நிலை தொடருமாயின், நாம்
முற்றுமுழுதாய் அழிக்கப்பட்டுவிடுவோம் என்பதில் ஐயமில்லை.சுற்றிவளைப்பு, தேடுதல், தலைஆட்டி, விசாரணை என முன்னாளில் எமக்கு பழக்கப்பட்ட வார்த்தைகளை
மீண்டும் நாம் பேசவேண்டிய சூழலே ஏற்படும். அச்சத்தோடும் பதற்றத்தோடும் வீதியில்
பயணிக்கவேண்டியநிலை உருவாகும். அடையாள அட்டையின்றி
நடமாடமுடியாத அவலம் தோன்றும். வீதிவீதியாய் முளைக்கும் காவலரண்களில் எமது பிள்ளைகள்
காட்சிப்பொருளாக நிற்கவைக்கப்படுவர், பாடசாலைக்கும் கோவிலுக்கும் கூட துணையின்றி செல்லமுடியாத
பேரவலம் பிறக்கும்.
இராணுவ அடக்குமுறையின் மூலம் அரசியல்
ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் நாம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறோம், இந்நிலையை நீடிக்கவும்,
இராணுவத்தின் ஊடுருவலை ஆழப்படுத்தவும் மேற்படி சம்பவங்கள் துணையாக்கப்ட்டுள்ளன. நாம்
சந்தித்த மிகமோசமான அழிவோடு எம்மை நிறுத்திவிடாது அதனை மேலும் நகர்த்தும் ஒரு வஞ்சக
அரசியல் வலைக்குள் வீழ்த்துவதே மேற்படி சம்பவத்தின் நோக்கமாக இருக்கலாம்.
நாளைய
இளைஞர்களின் வாழ்வினைக் கருத்தில் கொண்டும் அடக்குமுறைச் சக்திக்குள் வாழும் கையறு நிலையில் இருந்து
விடுதலை பெறவும் வேண்டுமெனின் எமது தலைமைகளும்
சர்வதேசமும் பல்கலை மாணவர்களின் கைது தொடர்பில் சிறந்த தீர்வினைப் பெற்றுத் தரவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
தமிழரசி,
ஆசிரியர்பீடம்,
தமிழருள் இணையத்தளம்.
#Tamilarul.net
#Tamil #News #Tamil News
#Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking
News Headlines #Latest Tamil
News #India News #World News #Tamil Film
#Jaffna #Kilinochchi #Mannar
#Mullathivu #Batticola #Kandy
#Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை