பேட்டிங்கை தேர்வு செய்தார் தோனி!!
Photo: IPLT20.com
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் முதல் குவாலிஃபையர் போட்டியில் டாஸ்வென்ற சி.எஸ்.கே கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார்.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் முதல் குவாலிஃபையர் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கெதிரான இரண்டு போட்டிகளிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ள நம்பிக்கையில் மும்பை களம்காண்கிறது. அதேநேரம், லீக் சுற்றுக்குப் பழிதீர்க்கும் உத்வேகத்துடன் சி.எஸ்.கே களமிறங்குகிறது. இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி, நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிடும் என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தப் போட்டியில் டாஸ்வென்ற சி.எஸ்.கே கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார். இரு அணிகளும் பிளேயிங் லெவனில் தலா ஒரு மாற்றம் செய்துள்ளன. சி.எஸ்.கேவில் காயம் காரணமாக கேதர் ஜாதவ் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக முரளி விஜய் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதேபோல், மும்பை அணியின் மெக்லெனஹனுக்குப் பதிலாக சுழற்பந்துவீச்சாளர் ஜெயந்த் யாதவ் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

டாஸின்போது பேசிய தோனி, `பிளே ஆஃப் போட்டி என இதைப் பார்க்கவில்லை. ஐபிஎல் போன்ற தொடர்களில் விளையாடும்போது, உங்கள் எண்னம் ஒவ்வொரு போட்டியாகப் பிரித்துப் பார்க்க வேண்டும். அன்றைய தினம் எதிரணியைக் கருத்தில்கொண்டு அதற்கென போட்டி வியூகங்களை அமைத்துக்கொள்ள வேண்டும். பிளே ஆஃப் பற்றி நாங்கள் அதிகம் சிந்திக்கவில்லை' என்றார். மும்பை அணி குறித்த கேள்விக்கு, ``மும்பை அணிக்கு மட்டும் மரியாதை கொடுப்பது என்பது தவறு. உலகின் தலைசிறந்த கிரிக்கெட் லீக் போட்டிகளில் ஒன்றான ஐபிஎல்-லில் ஏறக்குறைய எல்லா அணிகளுமே அபாயகரமானவையே. மும்பை அணியைப் பொறுத்தவரை எந்தச் சூழலிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களைக் கொண்டிருக்கிறது'' என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை